நிர்மலா: நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது

1 mins read
2605f3df-24c5-420b-a7e6-838be0228359
-

புது­டெல்லி: நாட்­டின் நிதிப்­பற்­றாக்­குறை கட்­டுக்­குள் இருப்­ப­தாக மத்­திய நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் கூறியுள்­ளார்.

கொரோனா நெருக்­க­டி­யின்­போ­தும் இந்­தி­யப் பொரு­ளா­தா­ரம் வளர்ச்­சிப் பாதையை நோக்கி முன்­னேறி வரு­வ­தாக டெல்­லி­யில் நடை­பெற்ற இந்­தியா-அமெ­ரிக்கா உத்­தி­சார் அமைப்பு ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் பேசி­ய­போது அவர் குறிப்­பிட்­டார்.

மேலும், தொழில் சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­க­ளால் எளி­தில் தொழில் தொடங்­கும் நாடாக இந்­தியா மாறி­வ­ரு­வ­தா­க­வும் நிர்­மலா சீதா­ரா­மன் கூறி­னார்.

இதன் வெளிப்­பா­டாக சரக்கு, சேவை வரி வசூல் அதி­க­ரித்­துள்­ள­தா­கச் சுட்­டிக்­காட்­டிய அவர், அமெ­ரிக்க முத­லீட்­டா­ளர்­கள் இடையே சுமூக சூழல் நில­வு­வ­தாக கூறி­னார்.

"நிதி திருத்­தங்­கள் உள்­ளிட்ட அனைத்­துமே உலக அரங்­கில் இந்­தி­யாவை வலி­மை­யுள்ள பொரு­ளா­தார நாடாக பார்க்க வைக்­கும். நாட்­டில் ஒவ்­வொரு துறை­யும் வெளி­நாட்டு முத­லீட்­டிற்கு ஏற்­ற­தாக மாறி வரு­கிறது," என்­றார் நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன்.