காங்கிரஸ், பிரசாந்த் கிஷோர் இடையே ஒப்பந்தம் என தகவல்

காங்கிரஸ், பிரசாந்த் கிஷோர் இடையே ஒப்பந்தம் என தகவல்

1 mins read
d3f137ec-25fa-4b94-87f4-ce6c65167a8d
-

புது­டெல்லி: தேர்­தல் வியூக நிபு­ணர் பிர­சாந்த் கிஷோ­ரு­டன் காங்­கி­ரஸ் கட்­சித் தலைமை தேர்­தல் ஒப்­பந்­தம் செய்­துள்­ள­தா­கத் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இதற்­கான பேச்­சு­வார்த்தை பல மாதங்­க­ளாக நடை­பெற்று வந்­த­தா­க­வும் மிக விரை­வில் அந்த ஒப்­பந்­தம் குறித்து அறி­விப்பு வெளி­யா­கும் என்­றும் காங்­கி­ரஸ் வட்­டா­ரங்­களில் கூறப்­ப­டு­கிறது.

பிர­த­மர் மோடிக்கு எதி­ராக அனைத்து எதிர்க்­கட்­சித் தலை­வர்­க­ளை­யும் இணைக்­கும் முயற்­சியை பிர­சாந்த் கிஷோர் தொடங்கி உள்­ள­தாக 'சம­யம்' ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

அண்­மை­யில் நடை­பெற்ற மேற்கு வங்­கத் தேர்­த­லில் முதல்­வர் மம்தா பானர்­ஜி­யின் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் வெற்றி பெற்­றதை அடுத்து அக்­கட்சி உட­னான பிர­சாந்த் கிஷோ­ரின் 'ஐ-பேக்' நிறு­வ­னம் செய்­து­கொண்­டுள்ள ஒப்­பந்­தம் 2024ஆம் ஆண்டு வரை நீடிக்­கும் என அறி­விக்­கப்­பட்­டது.

தேர்­தல் வியூ­கப் பணி­யி­லி­ருந்து வில­கு­வ­தா­கத் தெரி­வித்த பிர­சாந்த், அடுத்­த­கட்­ட­மாக பாஜ­க­வுக்கு எதி­ரான அர­சி­யல் கட்­சி­களை ஒருங்­கி­ணைத்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில் அவ­ரது நிறு­வ­னத்­துக்­கும் காங்­கி­ரஸ் கட்­சித் தலை­மைக்­கும் இடையே தேர்­தல் வியூ­கப் பணிக்­கான ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தாகி இருப்­ப­தாக அந்த ஊட­கச் செய்தி மேலும் தெரி­விக்­கிறது.

இதனால் தேசிய அரசியல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது.

இதற்கு முன்பு அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ்குமார், அமரீந்தர் சிங், ஜெகன்மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல மாநில முதல்வர்களுக்காக தேர்தல் வியூகப் பணிகளை மேற்கொண்டுள்ளார் பிரசாந்த் கிஷோர்.