இந்தியாவில் புதிதாக 50, 040 பேருக்கு கிருமித்தொற்று

இந்தியாவில் புதிதாக 50, 040 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
4908b0b0-ab4a-49a7-a4f2-4c9c7e2fab7d
-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50, 040 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் கொவிட்-19 கிருமியால் மரண எண்ணிக்கை மேலும் 1, 258 அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், தனது கடைத்தொகுதிகளையும் திரையரங்குகளையும் மூட உத்தரவிட்டது. 'டெல்டா பிளஸ்' என்ற அந்தப் புதியவகை கிருமி, எளிதில் பரவக்கூடியதாக இருப்பதால் சோதனைகளை அதிகரிக்கும்படி சுகாதார அமைச்சு அறிவுறுத்தியது. இந்தியாவில் மோசமான இரண்டாவது அலைக்கு இந்த டெல்டா வகை கிருமி பெரும் காரணமாக இருந்தது.

இதற்கிடையே, கொவிட்-19 நோயிலிருந்து குணமானோருக்கு ஏற்படும் வயிறு பாதிப்பு, ரத்தக் கட்டி ஏற்படுதல், கரும்பூஞ்சை உள்ளிட்ட புதிய மருத்துவ சிக்கல்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.