விமானப்படைத் தளம் மீது தாக்குதல்

விமானப்படைத் தளம் மீது தாக்குதல்

2 mins read
efcbe5c0-3a79-4007-9585-9768e859961b
ஆளில்லா வானூர்தி மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் தொழில்நுட்பப் பிரிவு கட்டடத்தின் கூரை சேதமடைந்தது. படம்: இந்திய ஊடகம் -

ஜம்மு: பாது­காப்­பு­மிக்க ஜம்மு விமானப்படைத் தளம் மீது நேற்று அதி­காலை 1.40 மணி­ய­ள­வில், ஆறு நிமிட இடை­வெ­ளி­யில் இரு குண்டு­வெ­டிப்­பு­கள் நிகழ்ந்­தன.

ஆளில்லா வானூர்தி மூலம் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்­திய ராணு­வத் தளம் ஒன்­றின்­மீது முதன்­முறை­யாக ஆளில்லா வானூர்தி மூலம் நடத்­தப்­பட்ட தாக்கு­தல் இதுதான். இதில் விமா­னப்­ப­டைப் பணி­யா­ளர்­கள் இரு­வர் இலே­சான காயம் அடைந்­த­னர்.

இதைத் தொடர்ந்து, தேசிய வெடி­குண்டு தரவு மைய வல்­லு­நர்­கள், தட­ய­வி­யல் வல்­லு­நர்­கள், ஜம்மு-காஷ்­மீர் போலி­சார் நிகழ்­விடத்­திற்கு விரைந்­த­னர்.

ஒரு குண்­டு­வெ­டிப்­பில் தொழில்­நுட்­பப் பிரிவு செயல்­படும் கட்­ட­டத்­தின் கூரைப்­ப­குதி சேத­ம­டைந்­தது. இன்­னொரு குண்­டு­வெ­டிப்பு திறந்­த­வெ­ளி­யில் நடத்­தப்­பட்­டது. வெடிப்­புச் சத்­தம் ஒரு கிலோ­ மீட்­டருக்கு அப்­பா­லும் கேட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

இந்­திய ராணு­வப் படை­யி­ன­ரின் தயார்­நி­லையை ஆய்வு செய்­வ­தற்­கா­கத் தற்­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங் இன்று லடாக் செல்­ல­ இருக்­கும் நிலை­யில், இந்­தக் குண்டு­வெ­டிப்­புத் தாக்­கு­தல்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

தாக்­கு­தல் குறித்து விமா­னப் படை­யும் தேசிய புல­னாய்­வுப் பிரி­வும் விசா­ரித்து வரு­கின்­றன.

கடந்த ஈராண்­டு­க­ளா­கவே பாகிஸ்­தான் ஆளில்லா வானூர்தி­களைப் பயன்­ப­டுத்தி, எல்லை தாண்டி ஆயு­தங்­களை வீசி வரு­வதா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

வெடிப்பொருளுடன் ஆடவர் கைது

இதற்கிடையே, திரி­கூட நகர் போலிஸ் நிலைய எல்­லைக்­குள் அமைந்­துள்ள கடைத்­தொ­குதி ஒன்­றில், பயங்­க­ர­வாதி எனச் சந்­தே­கிக்­கப்­படும் ஒரு­வரை ஜம்மு-காஷ்­மீர் போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

அந்த ஆட­வ­ரி­டம் இருந்து அதி நவீன வெடிப்­பொ­ருள் சாத­னம் ஒன்­றும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. அதன் எடை கிட்­டத்­தட்ட ஐந்து கிலோ இருக்­கும் என்று போலிஸ் கூடு­தல் தலைமை இயக்­கு­நர் முகேஷ் குமார் தெரி­வித்­தார்.