'தாஜ் ஹோட்டலில் பயங்கரவாதிகள்'

1 mins read
2d199ad2-199e-405d-9b9c-ae4262ac7243
-

மும்பை: புகழ்பெற்ற தாஜ் ஹோட்டலில் பயங்கரவாதிகள் இருவர் நுழையவிருப்பதாக வந்த தொலைபேசித் தகவலால் மும்பை போலிசார் பதறிப் போயினர். நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணியளவில் அடையாளம் தெரியாத ஒருவரிடம் இருந்து வந்த அந்த அழைப்பையடுத்து, வெடிகுண்டைக் கண்டுபிடித்து, செயலிழக்கச் செய்யும் நிபுணர் குழுவும் மோப்ப நாய்களும் அந்த ஹோட்டலுக்கு விரைந்தன; பாதுகாப்பும் பலப் படுத்தப்பட்டது. தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்தது என ஆராய்ந்தபோது, மகாராஷ்டிராவின் சத்தாரா மாவட்டத்திலிருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் 14 வயது மாணவன் ஒருவன், தன் தந்தையின் கைபேசியை எடுத்து, விளையாட்டாக அப்படிச் செய்தது தெரிய வந்தது. அதுபற்றி அவனின் தந்தையும் அறிந்திருக்கவில்லை. அச்சிறுவன்மீது வழக்குப்பதிவு எதுவும் செய்யப்படவில்லை.