நான்கு புதிய உருமாறிய கொரோனா: நிபுணர்கள் எச்சரிக்கை

1 mins read
fc0c26f6-3563-4f52-ae49-eb5006dc667a
மும்பையில் வீடில்லாமல் சாலையோரங்களில் வசித்து வருபவர்களுக்கும் நடமாடும் தடுப்பூசி மையங்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் பல்­வேறு மாநி­லங்­களில் 'டெல்டா பிளஸ்' வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலை­யில் மேலும் நான்கு உரு­மா­றிய கொரோனா தொற்று குறித்து நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் அனைத்­து­லக விமா­னப் பய­ணங்­கள் தொடங்­கப்­பட்­டால் வெவ்­வேறு உரு­மா­றிய கொரோ­னாக்­கள் பல்­வேறு நாடு­க­ளுக்­குப் பர­வும் என அஞ்­சப்­ப­டு­கிறது.

அந்த வகை­யில் இந்­தி­யா­வுக்­குள்­ளும் புதிய தொற்­று­கள் ஊடு­ரு­வக்­கூ­டும் என்­பதே நிபு­ணர்­க­ளின் எச்­ச­ரிக்கை.

கிரு­மி­கள் அதி­க­ரிக்­கும்­போது அவை மேலும் திரி­ப­டை­யும் என்­றும் அவற்­றின் ஆற்­றல் மேலும் மாறு­படும் என்­றும் சொல்­கி­றார் ஹைத­ரா­பாத்­தைச் சேர்ந்த மருத்­து­வர் விக்­னேஷ் நாயுடு.

உரு­மா­றிய கொரோனா வகை­களில் ஒன்­றான 'லாம்டா' தொற்று குறித்து எச்­ச­ரிக்­கை­யாக இருக்­க­வேண்­டும் என்­கி­றார் மூத்த மர­ப­ணு­ வி­ய­லா­ளர் எம். காஜா.

"உரு­மா­றிய கொரோனா வகை­க­ளின் மர­பணு அமைப்பை ஆராய்­வ­தன் மூலம் அவை எந்­தெந்த வகை­யில் உரு­மா­று­கின்­றன, அதன் தன்மை என்ன, எத்­த­கைய நோய் அறி­கு­றி­களை அவை ஏற்­ப­டுத்­தும், தொற்று விகி­தம் எப்­படி இருக்­கும், நோயின் தீவி­ரம் ஆகி­யவை குறித்து நம்­மால் புரிந்­து­கொள்ள முடி­யும்," என்­கி­றார் மருத்­து­வர் விக்­னேஷ்.

இதற்­கி­டையே நாடு முழு­வ­தும் நேற்று முன்­தி­னம் பலி­யா­னோர் எண்­ணிக்கை ஆயி­ரத்­துக்­கும் கீழ் பதி­வா­கி­யுள்­ளது.

திங்­கள்­கி­ழமை அன்று 979 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக சுகாதார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. அன்­றைய தினம் 46,148 பேர் புதி­தாக தொற்­றுக்கு ஆளாகி உள்­ள­னர்.