புதுடெல்லி: கொரோனா நெருக்கடி கட்டுக்குள் வந்த பிறகு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் முதலில் நுழையும் 5 லட்சம் பயணிகள் விசா கட்டணம் செலுத்த வேண்டாம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்றுலாத்துறை சார்ந்த நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும் என்றார்.
"சுற்றுலா முகவர்களுக்கு பத்து லட்ச ரூபாயும் உரிமம் பெற்ற சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ஒரு லட்சம் ரூபாயும் கடனாக வழங்கப்படும். அனைத்துலகப் பயணங்கள் தொடங்கிய பிறகு இந்தியாவுக்கு வரும் முதல் 5 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் விசா கட்டண சலுகையைப் பெறுவர்," என்றார் நிர்மலா சீதாராமன்.

