கோல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தாங்கர் ஓர் ஊழல்வாதி என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.
அத்தகைய ஒருவர் ஆளுநர் பதவியில் நீடிக்க மத்திய அரசு அனுமதிப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
"கடந்த 1996ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட ஹவாலா வழக்கில் ஆளுநர் ஜெக்தீப் தாங்கர் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
"மேற்கு வங்க மாநிலத்தின் வடக்குப் பகுதிக்கு அவர் திடீரென சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது. அவர் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே சந்தித்துப் பேசி உள்ளார்.
"இத்தகைய நடவடிக்கையின் மூலம் மேற்கு வங்கத்திலிருந்து அதன் வடக்குப் பகுதியைத் தனியாகப் பிரிப்பதற்கான சதி நடப்பதாக நான் உணர்கிறேன்," என்று மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

