சரத்பவார், சஞ்சய் ராவத் இருமுறை திடீர் சந்திப்பு

சரத்பவார், சஞ்சய் ராவத் இருமுறை திடீர் சந்திப்பு

1 mins read
68633ac0-eb02-4687-aef8-6d40fae3489b
-

மும்பை: மகா­ராஷ்­டிர மாநில சிவ­சேனா கட்­சி­யின் மூத்த தலை­வர் சஞ்­சய் ராவத், அம்­மா­நில முதல்­வரை­யும் தேசி­ய­வாத காங்­கி­ரஸ் தலை­வர் சரத்­ப­வா­ரை­யும் அடுத்­த­டுத்து சந்­தித்­துப் பேசி­யி­ருப்­பது அர­சி­யல் தளத்­தில் பர­பரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

மூன்று தினங்களில் இருமுறை இச்சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன.

அண்­மை­யில் டெல்லி சென்ற முதல்­வர் உத்­தவ் தாக்­கரே, அங்கு பிர­த­மர் மோடி­யைத் தனிப்­பட்ட முறை­யில் சந்­தித்­துப் பேசி­ய­தை அடுத்து சிவ­சேனா, தேசி­ய­வாத காங்­கி­ரஸ் இடை­யே­யான உற­வில் சிறு விரி­சல் ஏற்­பட்­ட­தா­க கூறப்படுகிறது. இந்­நி­லை­யில் தேசி­ய­வாத காங்­கி­ரஸ் தலை­வர் சரத்­ப­வாரை நேற்று முன்­தி­னம் திடீ­ரென சந்­தித்­துப் பேசி­னார் சஞ்­சய் ராவத்.