பதிவு செய்தவர்களைவிட அதிகமானோருக்கு தடுப்பூசி

பதிவு செய்தவர்களைவிட அதிகமானோருக்கு தடுப்பூசி

2 mins read
60bf97aa-d99a-42c8-bc06-58b6dbd86c7a
இந்தியாவில் அனைத்து ரயில் பயணி களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. மும்பை ரயில் நிலையத்தில் பரிசோதனை செய்து கொள்ள பயணிகள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.படம்: ஊடகம் -

மாதந்தோறும் 100 மில்லியன் தடுப்பூசிகள்; உற்பத்தியை அதிகரித்தது இந்திய சீரம் மையம்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கடந்த இரு வாரங்­களில் பதிவு செய்­த­வர்­களைவிட அதி­க­மா­னோ­ருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டி­ருப்­ப­தாக அண்­மைய தர­வு­கள் தெரி­விக்­கின்­றன.

கடந்து சென்ற மாதங்­களில் பல்­வேறு மாநி­லங்­களில் தடுப்­பூசி பற்­றாக்குறை ஏற்­பட்­டது. தடுப்­பூசி உற்­பத்தி நட­வ­டிக்­கை­யைத் துரி­தப்­ப­டுத்த வேண்­டும் என மாநில முதல்­வர்­கள் வலி­யு­றுத்­தி­னர்.

இந்­நி­லை­யில் உல­கின் மிகப்­பெரிய தடுப்­பூசி உற்­பத்­தி­யா­ள­ரான இந்­திய சீரம் மையம், தனது உற்­பத்­தித் திறனை மேலும் அதி­க­ரித்­துள்­ளது. அதன் பல­னாக மாதந்­தோ­றும் 100 மில்­லி­யன் தடுப்­பூ­சி­களை உற்­பத்தி செய்ய அம்­மை­யம் தயா­ராகி உள்­ளது.

மேலும், ஜூலை மாதம் முதல் இந்த இலக்கை முன்­வைத்து இயங்­கப் போவ­தாக அம்­மை­யம் உறுதி செய்­துள்­ளது. கடந்த மே மாதம் சீரம் மையம் 65 மில்­லி­யன் தடுப்­பூசி­களை உற்­பத்தி செய்த நிலை­யில் இம்­மா­தம் அது 90 மில்­லி­ய­னாக அதி­க­ரிக்க உள்­ளது.

ஜூலை முதல் ஆண்டு இறு­தி­வரை மாதந்­தோ­றும் 100 மில்­லி­யன் அஸ்ட்­ரா­ஸெ­னகா தடுப்­பூ­சியை சீரம் மையம் உற்­பத்தி செய்­யும்.

இதற்­கி­டையே இந்த உற்­பத்தி அதி­க­ரிப்­பா­னது குடி­மக்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடும் இந்­திய அர­சின் நட­வ­டிக்­கைக்கு வெகு­வா­கக் கைகொ­டுத்­தி­ருக்­கிறது. இம்­மா­தம் 12ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நாடு முழு­வ­தும் 61 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ளன.

இது தடுப்­பூ­சிக்­காக பதிந்து கொண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கையைவிட அதி­கம் என்­றும் குறிப்­பிட்ட காலக்­கட்­டத்­தில் 58 மில்­லி­யன் பேர் மட்­டுமே அர­சாங்­கத்­தின் தடுப்­பூ­சிக்­கான 'கோவின்' இணை­யத்­த­ளத்­தில் பெய­ரைப் பதிந்­துள்­ள­னர் என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது. கடந்த மே மாதம் முதல் தடுப்­பூசி போடும் இயக்­கம் விரி­வு­ப­டுத்­தப்­பட்ட நிலை­யில் முதன்­மு­றை­யாக பதிந்துகொண்­ட­வர்­களைவிட அதி­க­மா­னோ­ருக்கு ஊசி போடப்­பட்­டுள்­ளது.

நாடு முழு­வ­தும் இது­வரை 323.9 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டி­ருப்­ப­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இதன் மூலம் அதிக தடுப்­பூ­சி­கள் போடப்­பட்ட நாடு­க­ளின் பட்­டி­ய­லில் சீனா, அமெ­ரிக்­கா­வுக்கு அடுத்­த­ப­டி­யாக மூன்­றாம் இடத்­தில் உள்­ளது இந்­தியா. இந்த ஆண்டு இறு­திக்­குள் நாட்­டில் 18 வய­துக்கு மேற்­பட்ட அனைத்­துக் குடி­மக்­க­ளுக்­கும் தடுப்­பூசி போட­வேண்­டும் என மத்­திய அரசு இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.