80 மாவட்டங்களில் தொற்று விகிதம் அதிகமாக உள்ளது: மருத்துவ ஆய்வுக் கழகம் கவலை

80 மாவட்டங்களில் தொற்று விகிதம் அதிகமாக உள்ளது: மருத்துவ ஆய்வுக் கழகம் கவலை

2 mins read
1a793e23-0ff9-4640-b393-3a6d39b732a1
-

புது­டெல்லி: கொரோனா இரண்­டா­வது அலை­யின் தாக்­கம் இன்­னும் ஓய­வில்லை என இந்­திய மருத்­துவ ஆய்வுக் கழகம் தெரி­வித்­துள்­ளது.

நாடு முழு­வ­தும் சுமார் 80க்கும் மேற்­பட்ட மாவட்­டங்­களில் தொற்று விகி­தம் இன்­னும்­கூட அதி­க­மாக இருப்­பதை அம்­மன்­றம் சுட்­டிக் காட்டி உள்­ளது.

இது­கு­றித்து டெல்­லி­யில் செய்தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அந்த கழகத்தின் இயக்­கு­ந­ரான மருத்­து­வர் பல்­ராம் பார்­கவா, இப்போது அலட்சியமாக இருந்­தால் மீண்­டும் சிக்­க­லைச் சந்­திக்க வேண்டி இருக்­கும் என்­றார்.

ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா உள்­ளிட்ட உரு­மா­றிய கொரோனா தொற்­று­க­ளுக்கு எதி­ராக தடுப்­பூசி­கள் திறம்­பட செய­லாற்­று­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

80 மாவட்­டங்­களில் நீடித்­து­வ­ரும் பாதிப்பு பிற இடங்­க­ளுக்­கும் பரவி விடா­மல் தடுக்க வேண்­டி­யது மிக அவ­சி­யம் என்­றார் பல்­ராம் பார்­கவா.

இதற்­கி­டையே இந்­தி­யா­வில் நாள்­தோ­றும் அதிக அள­வில் தடுப்­பூசி போடப்­ப­டு­வது பிற நாடு­க­ளின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது. 'கோவின்' இணை­யத்­த­ளத்­தின் மூலம் நாடு முழு­வ­தும் லட்­சக்­க­ணக்­கா­னோர் தடுப்­பூ­சிக்­காக பதிவு செய்­கின்­ற­னர்.

இதை­ய­டுத்து அந்த வலைத்­த­ளத்­தைப் போல் தங்­க­ளுக்­கும் ஒன்றை உரு­வாக்­கித் தரு­மாறு 50 நாடு­கள் இந்­தி­யாவை அணுகி உள்­ளன.

இதற்­கு­ரிய மென்­பொ­ருளை அந்­நா­டு­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்க இந்­தியா முடிவு செய்­துள்­ள­தாக தடுப்­பூசி திட்­டத்­துக்­கான குழு­வின் தலை­வர் மருத்­து­வர் ஆர்.எஸ். சர்மா தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் நாடு முழு­வ­தும் கறுப்­புப் பூஞ்சை பாதிப்­பும் அதி­க­ரித்து வரு­கிறது.

திங்­கட்­கி­ழமை வரை 40,845 பேருக்கு பூஞ்சை பாதிப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்­சர் ஹர்ஷ்­வர்­தன் தெரி­வித்­துள்­ளார்.

இவர்­களில் 34,940 பேர் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் என்­றார் அவர்.