செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
07a2f974-526b-42f0-8ab9-c394b633a704
-

எஸ்­பிஐ: 4 தட­வைக்கு மேல்

பணம் எடுத்­தால் சேவை வரி

புது­டெல்லி: இந்­தி­யா­வின் 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்­தியா' வங்­கி­யின் சேமிப்­புக் கணக்கு வைத்­தி­ருப்­போர் தானி­யங்கி இயந்­தி­ரம் அல்­லது கிளை­களில் இருந்து மாதத்­தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்­தால் ஜிஎஸ்டி வரி வசூ­லிக்­கப்­படும். ஐந்­தா­வது முறை பணம் எடுத்­தால் முதல் சேவை கட்­ட­ண­மாக, 15 ரூபாய் மற்­றும் ஜிஎஸ்டி வரி வசூ­லிக்­கப்­படும் என அந்த வங்கி அறி­வித்­துள்­ளது. இந்த புதிய கட்­டண முறை இன்று முதல் அம­லுக்கு வரு­கிறது. பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபா­சிட் (BSBD) கணக்­கு­க­ளுக்கு இருந்த சலு­கை­க­ளைக் குறைக்­க­வும் சேவைக் கட்­ட­ணங்­களை அதி­க­ரிக்­க­வும் நாட்­டின் மிகப்­பெ­ரிய வங்­கி­யான எஸ்­பிஐ முடிவு செய்­துள்­ளது.

'சிக்ஸ்­பேக்' ஆசையால் ரூ.7 லட்­சம் பறி­கொ­டுத்த இளை­யர்

பெங்­க­ளூரு: ஒச­கெ­ரே­ஹள்­ளி­யைச் சேர்ந்­த­வர் கௌசிக் (வயது 24). இவர் பன­சங்­க­ரி­யில் உள்ள உடற்­ப­யிற்சி மையத்­திற்கு தின­மும் சென்று உடலை கட்­டுக்­கோப்­பாக வைக்க பயிற்சி எடுத்து வரு­கி­றார். இந்த நிலை­யில் அந்த உடற்­ப­யிற்சி மையத்­தின் பயிற்­று­விப்­பா­ளர் மோகன் என்­ப­வர், கௌசிக்­கி­டம் கட்­டுக்­கோப்­பான உடற்­கட்டை (சிக்ஸ்­பேக்) 3 மாதத்­தில் வர­வைப்­ப­தா­க­வும், இதற்­காக தனக்கு ரூ.2 லட்­சம் தர வேண்­டும் என்­றும் கேட்டு உள்­ளார். இத­னால் கௌசிக் ரூ.2 லட்­சத்தை மோக­னி­டம் கொடுத்­தார். பின்­னர் பல்­வேறு கார­ணங்­க­ளைக் கூறி கௌசிக்­கி­டம் இருந்து மோகன் மேலும் ரூ.5 லட்­சத்­தைப் பெற்­ற­தாக தெரி­கிறது. ஆனால்

மூன்று மாதங்­களாகி­யும் 'சிக்ஸ்­பேக்' வர­வில்லை. இந்­நி­லை­யில் மோகன் தலை­ம­றை­வாகி விட்­டார். இதை­ய­டுத்து மோகன் மீது கௌசிக் போலி­சில் புகார் செய்­துள்­ளார்.

'மகா­ராஷ்­டிர மாநி­லத்­த­வ­ருக்கு கொரோனா சான்­றி­தழ் கட்­டா­யம்'

பெங்­க­ளூரு: நாட்­டில் கொரோனா 2வது அலை கட்­டுக்­குள் வந்­துள்­ளது. தின­சரி பாதிப்பு 50,000க்கு கீழ் குறைந்­துள்­ளது. இந்த நிலை­யில் மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் உரு­மாற்­றம் அடைந்த டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் அதி­க­மாக பர­வத்­தொ­டங்­கி­யுள்­ளது. இதை தொடக்­கத்­தி­லேயே கட்­டுப்­ப­டுத்­தா­விட்­டால் கொரோனா 3வது அலைக்கு வழி­வ­குக்­கும் என்று மருத்­துவ நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகம் வருபவர்கள் தொற்று இல்லையென சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வேண்டும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

டெல்­லி­யில் மீண்­டும் கட்­டுப்­பாடு

புது­டெல்லி: டெல்­லி­யில் சில நாள்­க­ளுக்கு முன் தொற்று இரண்­டா­வது அலை குறைந்து வந்த நிலை­யில் படி­ப்ப­டி­யா­கத் தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டன. ஆனால், தற்­போது மீண்­டும் தொற்று பர­வும் அச்­சம் எழுந்­துள்­ளது. அதன் கார­ண­மாக அங்கு பல பகு­தி­களில் பல்­பொ­ருள் அங்­காடி, ஈரச்­சந்­தை­கள் போன்­றவை இயங்­கு­வ­தற்கு தொற்று பாது­காப்பு கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில் டெல்லி லட்­சுமி நக­ரில் உள்ள பல்­பொ­ருள் சந்­தை­யில் கட்­டுப்­பாட்டு விதி­மு­றை­கள் மீறப்­பட்­ட­தாக வந்த புகா­ரை­ய­டுத்து அந்­தச் சந்­தையை ஜூலை 5ஆம் தேதி வரை மூடு­வ­தற்கு டெல்லி மாந­க­ராட்சி உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

ஜூலை 31 வரை அனைத்­து­லக விமா­னச் சேவை­கள் நிறுத்­தம்

புது­டெல்லி: கொரோனா கிரு­மித்­தொற்­றின் அச்­சம் கார­ண­மாக இந்­தியா, பய­ணி­கள் விமா­னப் போக்­கு­வ­ரத்­துச் சேவைக்­கான தடையை ஜூலை 31ஆம் தேதி வரை விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைச்சு நீட்டித்துள்ளது. அதே நேரத்­தில் சரக்கு சேவை விமா­னங்­க­ளுக்­கும் சிறப்பு விமா­னச் சேவைகளுக்கு இந்த உத்­த­ரவு பொருந்­தாது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தொற்­று கார­ண­மாக 2020ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி அனைத்­து­லகப் பய­ணி­கள் விமா­னச் சேவையை இந்­தியா நிறுத்­தி­யது. முன்­ன­தாக ஜூன் 30ஆம் தேதி வரை அந்­தத் தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.