சண்டிகர்: முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து எட்டு லட்சம் ரூபாய் அளவுக்கு மின்கட்டண பாக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் முதல்வர் அம்ரேந்தர் சிங், அம்மாநில முன்னாள் அமைச்சர் சித்து ஆகியோர் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் மின்வெட்டு அதிகரித்திருப்பதை அடுத்து ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் சித்து.
முதல்வர் சரியான நடவடிக்கைகளை எடுக்காததே மின்வெட்டுக்கான காரணம் என்றும் அண்மையில் அவர் சாடினார். இந்நிலையில் அமிர்தசரசில் உள்ள தனது வீட்டுக்கான மின்கட்டணத்தை அவர் செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதியும் முடிந்துவிட்ட நிலையில் சித்து ரூ.867,540 மின்கட்டணம் செலுத்த வேண்டும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.