மூன்று மாதங்களில் ஆகக் குறைவான கொரோனா மரணங்கள் பதிவு

2 mins read
7f35e601-4f41-42d0-9119-18937c249859
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் நேற்று முன்­தி­னம் கொரோனா கிரு­மித்­தொற்­றால் 723 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. கடந்த மூன்று மாதங்­களில் பதி­வான ஆகக்­கு­றை­வான மரண எண்­ணிக்கை இது­வா­கும்.

திங்­கட்­கி­ழமை 39,796 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­யது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. நாடு முழு­வ­தும் தற்­போது 482,071 பேர் சிகிச்­சை­யில் உள்­ள­னர். இது­வரை 29,700,430 பேர் கிரு­மித்தொற்­றில் இருந்து முழு­மை­யாக மீண்­டுள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் புதி­தாக பாதிக்­கப்­பட்­டோர் பட்­டி­ய­லில் கேரள மாநிலம் முத­லி­டத்­தில் உள்­ளது. அங்கு திங்­கட்­கி­ழமை 12,100 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வாகின.

மகா­ராஷ்­டி­ரா­வில் 9,336, ஆந்தி­ ரா­வில் 3,175, ஒடி­சா­வில் 2,870, தமி­ழ­கத்­தில் 3,867 பேர் புதி­தாக கிரு­மித்­தொற்­றுக்கு ஆளாகி உள்­ள­னர்.

நாட்­டில் பதி­வான புதிய தொற்­றுச் சம்­ப­வங்­களில் சுமார் 78 விழுக்­காட்டுச் சம்­ப­வங்­கள் இந்த ஐந்து மாநி­லங்­க­ளில்­தான் பதி­வாகி உள்­ளன.

புதிய நோயா­ளி­க­ளின் எண்­ணிக்­கை­யில் 30.41 விழுக்­காடு கேர­ளா­வின் பங்­க­ளிப்­பாக உள்­ளது என சுகா­தார அமைச்­சின் அண்­மைய அறிக்கை தெரி­விக்­கிறது.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வில் கொரோனா இரண்­டாம் அலை­யில் எந்­த­வித நோய்­களும் இல்­லாத இளை­யர்­கள் அதிக அள­வில் பலி­யா­கி­விட்­ட­தாக அண்­மைய ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது.

ஐசி­எம்­ஆர், எய்ம்ஸ் மருத்­து­வ­மனை, தேசிய நோய் கட்­டுப்­பாட்டு மையம் ஆகி­யவை இணைந்து இந்த ஆய்வை மேற்­கொண்­டுள்­ளன.

மொத்­தம், 18,961 பேரி­டம் நடத்­தப்­பட்ட ஆய்­வின்­போது 20 முதல் 39 வய­துக்­குட்­பட்ட இளை­யர்­கள் பலர் கிரு­மித்­தொற்­றுப் பாதிப்­புக்கு ஆளா­ன­தும் அவர்­களில் பெரும்­பா­லா­னோர் நீரி­ழிவு, ரத்த அழுத்­தம் போன்ற இணை நோய்­க­ளால் பாதிக்­கப்­ப­டா­த­வர்­கள் என்­ப­தும் தெரிய வந்­துள்­ளது. இதற்­கி­டையே, ஜம்மு காஷ்­மீ­ரின் 13 மாவட்­டங்­களில் கிருமிப் பரவலைத் தடுக்க பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த ஊர­டங்கு முடி­வுக்கு வந்­துள்­ளது.