உள்நாட்டு விமானப் பயணம்: 65% பயணிகளுக்கு அனுமதி

உள்நாட்டு விமானப் பயணம்: 65% பயணிகளுக்கு அனுமதி

1 mins read
575116d0-1c46-458a-9dd2-e1635673999e
-

புதுடெல்லி: உள்நாட்டு விமானங்களில் 65 விழுக்காடு இருக்கைகளைப் பயணிகளுக்கு ஒதுக்கலாம் என விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இதையடுத்து உள்நாட்டு விமானப் போக்குவரத்து மிக விரைவில் இயல்பு நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா கிருமித்தொற்று நெருக்கடியால் விமானப் போக்குவரத்துத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விமானச் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.

பாதிப்பு ஓரளவு குறையத் தொடங்கியதும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து 50 விழுக்காடு பயணிகளுடன் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. தற்போது 65 விழுக்காடு விமான இருக்கைகளை நிரப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை உட்பட ஊரடங்கு தளர்த்தப்பட்ட நகரங்களில் இருந்து அதிகப்படியான விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.