மேகதாது அணை விவகாரம்: எடியூரப்பா திட்டவட்டம்

மேகதாது அணை விவகாரம்: எடியூரப்பா திட்டவட்டம்

1 mins read
2742b30d-9fef-42dd-88bb-04b496840f66
-

புதுடெல்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அணை கட்டும் திட்டத்தை கைவிட முடியாது என கர்நாடக முதல்வர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை, அமைச்சர் துரைமுருகன் நேற்று சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அணை கட்டும் திட்டத்தை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என முதல்வர் எடியூரப்பா உறுதிபடக் கூறியுள்ளார்.