முன்னாள் அமைச்சரின் மனைவி கொலை

1 mins read
ec902b0d-0081-49d0-9f79-d0fda4498c10
-

புது­டெல்லி: முன்­னாள் இந்­திய அமைச்­சர் பி. ரங்­க­ரா­ஜன் குமா­ர­மங்­க­லத்­தின் துணை­வி­யார் கிட்டி குமா­ர­மங்­க­லம், 67, நேற்று முன்­தினம் இரவு புது­டெல்­லி­யில் உள்ள அவ­ரது வீட்­டில் கொலை செய்­யப்­பட்­டார்.

சம்­பவ நாளன்று இரவு 9 மணி­ய­ள­வில் இல்­லப் பணிப்­பெண்­ணு­டன் தமது வீட்­டில் அவர் தனி­யாக இருந்­தார். அப்­போது, அவ­ரது சல­வை­யா­ளாக வேலை செய்த ஆட­வர் ஒரு­வர், மேலும் இரு­வ­ரு­டன் சேர்ந்து திரு­டும் நோக்­கு­டன் அவ­ரது வீட்­டி­னுள் புகுந்­த­தாக போலிஸ் தெரி­வித்­தது.

"கத­வைத் திறந்த பணிப்­பெண்ணை இழுத்­துச் சென்று ஓர் அறை­யில் கட்­டிப்­போட்­டான் அந்தச் சல­வை­யாள். மற்ற இரு­வ­ரும் திரு­வாட்டி கிட்­டி­யைத் தாக்கி, தலை­யணை­யால் அவ­ரது முகத்தை அழுத்தி, மூச்சைத் திணறடித்து கொலை செய்­த­னர்," என்று காவல்­துறை உதவி ஆணை­யர் இங்­கித் பிர­தாப் சிங் விவ­ரித்­தார்.

கொலை தொடர்­பில் இரவு 11 மணி­ய­ள­வில் போலி­சுக்­குத் தக­வல் கிடைத்­ததை அடுத்து, கொலை­யா­ளி­க­ளைப் பிடிக்க தனிக் குழுக்­கள் அமைக்­கப்­பட்­டன. அதைத் தொடர்ந்து, கொலை­யில் தொடர்­பு­டைய சல­வை­யா­ளான ராஜு, 24, கைது செய்­யப்­பட்டான். மற்ற இரு­வ­ரும் தலை­மறை­வா­கி­விட்­ட­னர்.

திரு­வாட்டி கிட்டி உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்­க­றி­ஞ­ரா­கப் பணி­யாற்­றி­ய­வர். அவ­ரின் கண­வர் திரு ரங்­க­ரா­ஜன் குமா­ர­மங்­க­லம் 1984 பொதுத் தேர்­த­லில் சேலம் தொகுதி­யில் இருந்­தும் 1998ல் திருச்சி தொகு­தி­யில் இருந்­தும் நாடா­ளு­மன்­றத்­திற்­குத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார். 1998ல் பிர­த­மர் வாஜ்­பாய் தலை­மை­யி­லான அமைச்­ச­ர­வை­யில் மின்­துறை அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்ற அவர், பத­வி­யில் இருந்­த­போதே 2000ஆம் ஆண்­டில், தமது 48 வயதில் இரத்தப் புற்று­நோ­யால் காலமானார்.