ஹர்தீப் சிங்: கச்சா எண்ணெய் உற்பத்தியை பெருக்குவதில் கவனம் செலுத்துவேன்

1 mins read
85787b9a-c97d-426d-bf38-af93ce27c698
விமானப்போக்குவரத்துத்துறைக்கு புதிய அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜியோதிராதித்யா சிண்டியாவை மலர்க்கொத்து அளித்து வரவேற்கும் முன்னாள் விமானப்போக்குவரத்து அமைச்சரும் இப்போதைய பெட்ரோலியத்துறை அமைச்சருமான ஹர்தீப் சிங் புரி. படம்: ஏஎப்பி -

புது­டெல்லி: பெட்­ரோ­லியம் மற்றும் இயற்கை எரி­வாயுத் துறை அமைச்­ச­ராக நேற்று முன்­தி­னம் பொறுப்­பேற்­றுக்­கொண்ட திரு ஹர்­தீப் சிங் புரி, "உல­கம் முழு­வ­தும் எரி­சக்தி தொடர்­பாக தொழில்­நுட்­பங்­களும் கொள்­கை­களும் மாறி வரு­கின்­றன. அதற்­கேற்ப இந்­தி­யா­வும் எரி­சக்தி துறை­யில் மாற்­றங்­களைச் செய்ய வேண்­டி­ய­தற்­கான நேரம் வந்­து­விட்­டது. எரி­சக்தி துறை­யின் மாற்­றம் நாட்­டுக்கு கவர்ச்­சி­க­ர­மான வாய்ப்­புகளை அளிக்­கும். இந்­தியா சுய­சார்­பு­டை­ய­தாக மாற பிர­த­மர் மோடி­யின் தொலை­நோக்கு பார்­வை­யு­டன் கச்சா எண்­ணெய் மற்­றும் இயற்கை எரி­வாயு உற்­பத்­தியை அதி­க­ரிக்க கவ­னம் செலுத்­து­வேன்," என்றார்.

"இயற்கை எரி­வா­யுவை அடிப்­ப­டை­யா­கக்­கொண்ட பொரு­ளா­தா­ரத்தை உரு­வாக்­கு­வது தொடர்­பா­க­வும் நான் பணி­யாற்­று­வேன். பிர­த­மர் அறி­வித்­த­வாறு 2030ஆம் ஆண்­டிற்­குள் நாட்­டின் முதன்மை எரி­சக்­திக் கல­வை­யில் இயற்கை எரி­வா­யு­வின் பங்கை 15 விழுக்­கா­டாக உயர்த்­து­வேன்.

"கடந்த ஏழாண்­டு­களில் எனக்கு முன்பு இந்­தப் பணி­யில் இருந்த திரு தர்­மேந்­திர பிர­தா­னின் வழி­காட்­டு­த­லின்கீழ் இந்­தத் துறை­யில் ஏரா­ள­மான சீர்­தி­ருத்­தங்­களும் முன் முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அவற்றை முன்­னெ­டுத்­துச் செல்­வ­து­டன், பிர­த­மருக்குத் துணையாக நம் நாட்டு மக்­கள் மற்­றும் நாட்­டின் தேவை­யைப் பூர்த்தி செய்­ய­வும் நான் பாடு­ப­டு­வேன்," என்று தெரி­வித்­தார்.