33 அமைச்சர்கள்மீது குற்றவியல் வழக்கு

2 mins read
afb01324-ef42-49bf-8807-9c479c57e3c1
-

புது­டெல்லி: அண்­மை­யில் விரி­வு­படுத்­தப்­பட்ட இந்­திய அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெற்­றுள்ள 78 பேரில் குறைந்­தது 42 விழுக்­காட்­டி­னர்க்கு எதி­ராக குற்­ற­வி­யல் வழக்­கு­கள் உள்­ளன என்று ஜன­நா­ய­கச் சீர்­திருத்­தச் சங்­கம் (ஏடி­ஆர்) எனும் அமைப்­பின் அறிக்கை கூறு­கிறது.

அவர்­களில் நால்­வர்­மீது கொலை முயற்சி வழக்­கு­கள் இருப்­ப­தாக அந்த அறிக்கை குறிப்­பிட்­டுள்­ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்­போது அந்த அமைச்­சர்­கள் தாக்­கல் செய்த தேர்­தல் ஆவ­ணங்­க­ளின் அடிப்­படை­யில் 'ஏடி­ஆர்' அமைப்பு தனது அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளது.

அவர்­களில் 33 பேர் தங்­கள்­மீது குற்­ற­வி­யல் வழக்­கு­கள் இருப்­பதாக அந்த ஆவ­ணங்­களில் குறிப்­பிட்­டு உள்­ள­னர். அவர்­களில் 24 பேர் மீது கொலை, கொலை முயற்சி அல்­லது கொள்ளை போன்ற கடும் குற்­ற­வி­யல் வழக்­கு­கள் உள்­ளன.

அத்­து­டன், 70 அமைச்­சர்­கள் ஒரு கோடிக்­கு­மேல் சொத்து வைத்­துள்­ள­தா­க­வும் அந்த அறிக்கை தெரி­வித்­துள்­ளது.

ஜோதி­ரா­தித்ய சிந்­தியா (ரூ.379 கோடி), பியூஷ் கோயல் (ரூ.95 கோடி), நாரா­யண் ரானே (ரூ.87 கோடி), ராஜீவ் சந்­தி­ர­சே­கர் (ரூ.64 கோடி) ஆகி­யோர் பணக்­கார அமைச்­சர்­கள் பட்­டி­ய­லில் முதல் நான்கு இடத்­தில் இருப்­ப­வர்­கள்.

அமைச்­சர்­க­ளின் சரா­சரி சொத்து மதிப்பு கிட்­டத்­தட்ட ரூ.16.24 கோடி என அவ்­வ­றிக்கை குறிப்­பிட்­டுள்­ளது.

திரி­பு­ரா­வைச் சேர்ந்த பிரத்­திமா பௌமிக் (ரூ.6 லட்­சம்), மேற்கு வங்­கத்­த­வ­ரான ஜான் பர்லா (ரூ.14 லட்­சம்), ராஜஸ்­தா­னின் கைலாஷ் சௌத்ரி (ரூ.24 லட்­சம்), ஒடிசா மாநி­லத்­தின் பிஷ்­வேஸ்­வர் துடு (ரூ.27 லட்­சம்), கேர­ளா­வைச் சேர்ந்­த­வ­ரும் மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் இருந்து நாடா­ளு­மன்ற மேல­வைக்­குத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வரு­மான வி.முர­ளி­த­ரன் (ரூ.27 லட்­சம்) ஆகி­யோர் சொத்­துப் பட்­டி­யலில் கடைசி நிலை­களில் இருக்­கின்­ற­னர்.

தேர்­தல் உரி­மை­கள் குழு­வான ஏடி­ஆர், தேர்­த­லுக்­கு­முன் அர­சியல்­வா­தி­க­ளின் பின்­னணி குறித்த தக­வல்­களை உறு­தி­செய்து, அறிக்­கை­யாக வெளி­யி­டு­வதை வழக்­க­மா­கக் கொண்­டுள்­ளது.