உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளால் உ.பி.யில் கடும் வன்முறை

2 mins read
aee4c25b-7d5e-46c7-9647-15412f21a7c4
-

லக்னோ: உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் உள்­ளாட்­சித் தேர்­தல் முடி­வு­கள் அறி­விப்­பைத் தொடர்ந்து 17 மாவட்­டங்­களில் கடும் வன்­முறை வெடித்­துள்­ளது.

அண்­மை­யில் உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தில் 825 இடங்­க­ளுக்கு உள்­ளாட்­சித் தேர்­தல் நடந்­தது. இந்தத் தேர்­த­லில் பாஜக மற்­றும் அப்னா தளம் உள்­ளிட்ட கட்சிகள் கூட்­டணி அமைத்­தி­ருந்­தன. இந்த தேர்­த­லில் பாஜக மற்­றும் அப்­னா­த­ளம் இணைந்து 626 இடங்­க­ளைக் கைப்­பற்றி உள்­ளன. ஆனால் தேர்­தல் முடி­வு­கள் அறி­விக்­கப்­பட்­ட­தி­லி­ருந்தே மாநி­லத்­தில் பல அசம்­பா­வித சம்­ப­வங்­கள் நிகழ்ந்து வரு­கின்­றன

உள்­ளாட்­சித் தேர்­தல் முடி­வு­க­ளுக்­குப் பிறகு 17 மாவட்­டங்­களில் வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் நடந்­த­தாக காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது குறித்து ஈட்­டவா மாவட்ட காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ளர் பிர­சாந்த் குமார் பிர­சாத் கூறு­கை­யில் "பார்­புரா மண்­ட­லத்­தில் உள்ள வாக்­குப்­ப­திவு மையத்­தில் தடுப்­பு­களை மீறி வந்­த­வர்­க­ளைத் தடுத்­த­போது, சிலர் என் மீது தாக்­கு­தல் நடத்­தித் தப்­பி­விட்­ட­னர்" எனத் தெரி­வித்­தார்.

இதைப் போல் பல்­வேறு மாவட்­டங்­களில் நடந்த வன்­மு­றைச் சம்­ப­வங்­களில் காவல்­துறை மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டன, செய்­தி­க­ளைச் சேக­ரிக்­கச் சென்ற செய்­தி­யா­ளர்­கள் மீதும் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­ட­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்தத் தாக்­கு­த­லில் பாஜக, சமாஜ்­வாடி மற்­றும் பகு­ஜன் சமாஜ் கட்­சி­யி­னர் ஈடு­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இது குறித்து சமாஜ்­வாடி கட்­சித் தலை­வர் அகி­லேஷ் யாதவ், "உபி மாநி­லத்தை ஆளும் பாஜக தனது அதி­கா­ரத்­தைப் பயன்­படுத்தி, தங்­க­ளுக்­குச் சாத­க­மாக வாக்­கு­க­ளைப் பெற்­றுள்­ளது. தேர்­த­லில் போட்­டி­யிட்ட பஞ்­சா­யத்து வேட்­பா­ளர்­கள் வெளிப்­ப­டை­யா­கவே கடத்­தப்­பட்­ட­னர்.

மேலும் சமாஜ்­வாடி கட்­சி­யின் வேட்­பா­ளர்­க­ளின் வீடு­களில் திடீர் சோதனை நடத்தி உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் ஜன­நா­ய­கத்தை பாஜக பிணை­யக் கைதி­யாக வைத்­துள்­ளது," எனக் கூறி உள்­ளார்.