லக்னோ: அல் காய்தா ஆதரவு பயங்கரவாதிகள் இருவர் கைது

காஷ்மீரில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிரடி சோதனையில் எழுவர் பிடிபட்டனர்

லக்னோ: அல் காய்தா அமைப்புடன் தொடர்புள்ள பயங்கரவாதிகள் இருவரை உத்தரப் பிரதேச போலிசார் கைது செய்துள்ளனர். இருவரும் சுதந்திர தினத்தன்று பல்வேறு நாச வேலைகளை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதான இருவரும் அன்சார் கஸ்வத்துல் ஹிந்த் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மின்ஹாஸ் அகமது, மசீருதீன் ஆகிய அவ்விரு பயங்கரவாதிகளும் மனித வெடிகுண்டு தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தனர். மேலும், ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் நாச வேலைகளைப் புரியவும் திட்டம் தீட்டியிருந்தனர்.

மக்­கள் அதி­கம் கூடும் இடங்­க­ளைக் குறி­வைத்து தாக்­கு­தல் நடத்­து­வது அவர்­க­ளது திட்­ட­மாக இருந்­துள்­ளது.

இதற்­காக நிறைய ஆயு­தங்­களை­யும் வெடி­பொ­ருள்­க­ளை­யும் இரு­வ­ரும் சேக­ரித்­துள்­ள­னர்.

லக்­னோ­ நகரில் பயங்­க­ர­வாதத் தடுப்­புப் பிரிவு போலிஸ் மேற்­கொண்ட அதி­ரடி நட­வ­டிக்­கை­யின்­போது மின்­ஹாசும் மசீ­ரு­தீனும் பிடி­பட்­ட­னர்.

விசா­ர­ணை­யின்­போது தங்­க­ளு­டன் இருந்த மேலும் சில பயங்­க­ர­வா­தி­கள் தப்­பிச் சென்­று­விட்­ட­தாக அவர்­கள் கூறி­யுள்­ள­னர். இதை­ய­டுத்து தப்­பிச் சென்­ற­வர்­களுக்­கும் வலை­வீ­சப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, காஷ்­மீ­ரில் நேற்று முன்­தி­னம் தேசிய புல­னாய்வு பிரிவு அதி­கா­ரி­கள் ஏழு இடங்­களில் ஒரு­சேர அதி­ர­டிச் சோதனை மேற்­கொண்­ட­னர். அப்­போது எழுவர் கைதா­கி­னர்.

பயங்­க­ர­வாதச் செயல்­க­ளுக்கு சில தரப்­பி­னர் நிதி­யு­தவி வழங்­கு­வ­தாக கிடைத்த தக­வ­லின் பேரில் இந்­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

ஐஎஸ்­ஐ­எஸ் பயங்­க­ர­வாத இயக்­கத்­துக்கு ஆள் சேர்க்­கும் வித­மாக இளை­யர்­க­ளைக் குறி­வைத்து சிலர் செயல்­ப­டு­வ­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

இவ்­வாறு தேர்வு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்குப் பயிற்சி அளிக்­கப்­பட்டு, பின்­னர் இந்­தி­யா­வுக்கு எதி­ராக தாக்­கு­தல் நடத்த தூண்­டி­வி­டப்­படு­கின்­ற­னர்.

இது தொடர்­பாக இணை­யம் வழி திட்­ட­மிட்டே பிர­சா­ரம் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் நிலை­யில், இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளுக்கு நிதி உத­வி­யும் வழங்­கப்­ப­டு­கிறது. இந்த குற்­றச்­சாட்­டின் பேரில் குறிப்­பிட்ட ஓர் அமைப்­பின் தலை­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

மேலும் அறுவர் கைதாகி உள்­ள­னர் என்­றும் அவர்­க­ளி­டம் இருந்து மிக முக்­கிய ஆவ­ணங்­கள், மின்­னி­லக்கக் கரு­வி­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அதி­காரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அண்­மை­யில்­தான் தீவி­ர­வாத செயல்களுக்கு ஆத­ர­வா­க­வும் இந்தி­யா­வுக்கு எதி­ரா­க­வும் செயல்­பட்ட 11 அரசு ஊழி­யர்­களை ஜம்மு காஷ்­மீர் அரசு பணி­நீக்­கம் செய்­தது. அதற்கு அடுத்த நாளே மேற்­குறிப்­பிட்ட சோதனை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!