23,000 மாணவர்கள் பாதிப்பு

23,000 மாணவர்கள் பாதிப்பு

1 mins read
881c185f-584e-40b5-821e-0d036164ec68
-

புது­டெல்லி: கொரோனா நெருக்­கடி கார­ண­மாக சீனா­வில் படித்து வரும் கிட்டத்தட்ட 23 ஆயி­ரம் இந்­திய மாண­வர்­க­ளின் கல்வி பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இவர்­களில் பெரும்­பான்மையோர் மருத்­து­வம் பயின்று வரு­கின்­ற­னர்.

கொரோனா தொற்­றுப்­ப­ர­வல் தொடங்­கி­ய­தும் நாடு திரும்­பிய இவர்­களில் பெரும்­பா­லா­ர் மீண்­டும் சீனா செல்ல முடி­ய­வில்லை. கடந்த 17 மாதங்­க­ளாக இவர்­கள் இணை­யம் வழி கற்­றல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், வரும் செப்­டம்­பர் மாதம் இந்­திய மாண­வர்­க­ளுக்குச் சீனா செல்­வ­தற்­கான அனு­மதி கிடைக்­கும் என மத்­திய கல்வி அமைச்சு வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.