'ஸிக்கா' பரவல் அதிகரிப்பு

'ஸிக்கா' பரவல் அதிகரிப்பு

1 mins read
354367e8-f3e6-4ec4-8d23-e3411338d1d3
-

திரு­வ­னந்­தபுரம்: கேர­ளா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று அதி­க­ரித்­துள்ள நிலை­யில், 'ஸிக்கா' தொற்­றுப் பர­வ­லும் புதிய அச்­சு­றுத்­த­லாக உரு­வெ­டுத்­துள்­ளது.

அம்­மா­நி­லத்­தில் இது­வரை 18 பேருக்கு 'ஸிக்கா' கிருமி தொற்­றி­யுள்­ளது. இவர்­களில் ஒன்­றரை வயது குழந்­தை­யும் அடங்­கும்.

பாதிக்­கப்­பட்ட அனை­வ­ரும் திரு­வ­னந்­த­பு­ரத்­தில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அவர்­கள் தொடர்ந்து மருத்­து­வக் கண்­கா­ணிப்­பில் இருந்து வரு­வ­தா­க­வும் உரிய சிகிச்சை அளிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் கேரள சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, கொரோனா கிருமி, 'ஸிக்கா' கிருமி பர­வ­லைத் தடுப்­பது தொடர்­பான நட­வ­டிக்­கை­கள் குறித்து ஆய்வு மேற்­கொள்ள ஆறு பேர் கொண்ட மத்­திய நிபு­ணர்­கள் குழு கேர­ளா­வுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது.

இக்­கு­ழு­வி­னர் திரு­வ­னந்­த­பு­ரத்­தில் மாவட்ட மருத்­துவ அதி­கா­ரி­க­ளு­டன் கலந்­தா­லோ­ச­னை­யில் ஈடு­பட்­ட­னர்.

இதை­ய­டுத்து அங்கு தொற்­றுப்­ப­ர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் தீவி­ர­ம­டை­யும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

இதற்­கி­டையே, கேர­ளா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் ஞாயிற்­றுக்­கி­ழமை அன்று 12 ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மா­னோர் புதி­தாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

ஊர­டங்கு உள்­ளிட்ட கடும் கட்­டுப்­பா­டு­கள் அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யி­லும், கேர­ளா­வில் தொற்று எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வது மாநில அர­சுக்கு கவ­லையை ஏற்­ப­டுத்தி உள்­ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.