தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேக வெடிப்பு: வெள்ளத்தில் மூழ்கிய இமாச்சலப் பிரதேசம்

2 mins read
8b0aa1c9-453b-4a10-972d-4e1b65fe174a
தர்மசாலாவில் மாஞ்சி நதியோரம் உள்ள வீடுகள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. படம்: ஏஎஃப்பி -

டெல்லியில் தொடர் மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புது­டெல்லி: இமாச்­ச­லப் பிர­தே­சத்­தில் திடீர் மேக வெடிப்பு கார­ண­மாக கன­மழை கொட்­டித் தீர்த்­தது. இத­னால் ஏற்­பட்ட வெள்­ளப் பெருக்­கில் சிக்கி பல கட்­ட­டங்­கள் சேத­ம­டைந்­தன.

கங்ரா உள்ளிட்ட சில இடங்­களில் நிலச்­ச­ரி­வு­கள் ஏற்­பட்­ட­தா­க­வும் சிறு பாலங்­கள் வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்­ட­தா­க­வும் ஊடகத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

வட மாநி­லங்­களில் பருவ மழை தீவி­ர­ம­டைந்­துள்­ளது. உத்­த­ரப் பிர­தே­சம், மத்­தி­யப் பிர­தே­சம், ராஜஸ்­தான் உள்­ளிட்ட மாநி­லங்­களில் கன­மழை பெய்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், இமாச்­ச­லப் பிர­தே­சத்­தில் கன­மழை பெய்­யும் என வானிலை ஆய்வு மையம் முன்பே கணித்­தி­ருந்­தது. அதன்­படி, நேற்று அங்கு மேக வெடிப்பு ஏற்­பட்­டது.

ஞாயிற்றுக்கிழமை தொடங்­கிய மழை, 15ஆம் தேதி வரை நீடிக்­கும் எனக் குறிப்­பிட்­டுள்ள வானிலை மையம், மழைக்கான மஞ்­சள் எச்­ச­ரிக்­கை­யும் விடுத்­துள்­ளது.

சிம்­லா­வில் ஜாக்ரி நெடுஞ்­சாலை­யில் நிலச்­ச­ரிவு ஏற்­பட்ட நிலை­யில், டேரா­டூன் மாவட்­டத்­தில் பாலம் ஒன்று அடித்­துச் செல்­லப்­பட்­டது.

மணாலி செல்­லும் தேசிய நெடுஞ்­சா­லை­யில் பல இடங்­கள் வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்­ட­தால் போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டது.

தர்­ம­சா­லா­வில் உள்ள மாஞ்சி காட் பகு­தி­யில் இரண்டு கட்­ட­டங்­கள் வெள்­ளத்­தில் சேத­ம­டைந்து சரிந்­துள்­ளன. பல இடங்­களில் கார்­களும் இரு­சக்­கர வாக­னங்­களும் வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்­டன. தர்­ம­சாலா விமான நிலை­யம் மூடப்­பட்­டுள்­ளது.

வெள்­ளம், நிலச்­ச­ரி­வு­களில் சிக்கி மூன்று பேர் பலி­யா­கி­னர், சேதத்­தின் அளவு குறித்து இது­வரை அதி­கா­ர­பூர்வ தக­வல்­கள் ஏதும் இல்லை. காணாமல் போனவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதற்­கி­டையே, தலை­ந­கர் டெல்­லி­யி­லும் மழை வெளுத்­துக் கட்­டு­கிறது. கடந்த 10ஆம் தேதி, பருவ மழை தொடங்­கி­யது முதல் மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­களில் தொடர்ந்து மழை பெய்­கிறது.

டெல்லி நக­ரின் பல்­வேறு பகு­தி­களில் மழை­நீர் தேங்­கி­யுள்­ள­தால் போக்­கு­வ­ரத்­தும் பொது­மக்­க­ளின் இயல்பு வாழ்க்­கை­யும் பாதிப்­புக்கு உள்­ளா­ன­தாக ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.