புதுடெல்லி: தமிழ் கல்வெட்டுகளைப் பதிப்பிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது கவலை அளிப்பதாக தமிழ் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய தொல்பொருள் ஆய்வுக்கழகத்தில் கல்வெட்டியல் துறையில் தற்போது கல் வெட்டியலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தொல்லியல் சார்பில் கண்டுபிடிக்கப்படும் கல்வெட்டுகள் 'படி எடுத்தல்' முறையில் காகித நகல்களாக சேகரிக்கப்படுகின்றன.
1886ஆம் ஆண்டு தொடங்கி கல்வெட்டுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
காகித நகல்களின் ஆயுள் 75 ஆண்டுகள். அதற்குள் அவற்றைப் படித்து ஆங்கில மொழிபெயர்ப்புடன் பதிப்பிப்பதுதான் கல்வெட்டு ஆய்வாளர்களின் பணியாகும்.
இந்நிலையில், தொல்பொருள் ஆய்வுக்கழகத்தில் போதுமான கல்வெட்டியலாளர்கள் இல்லாததால் கல்வெட்டு பதிப்பிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

