லக்னோ: உத்தரப் பிரதேச அரசின் ஒரு குழந்தை கொள்கையால் இந்துக்களின் எண்ணிக்கை குறையும் ஆபத்து உள்ளதாக விசுவ இந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது.
இந்தக் கொள்கையை அம்மாநில அரசு கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது, அரசுப் பணி கிடைக்காது, ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொண்டால் கூடுதல் சலுகைகள் கிடைக்கும் என்பன உள்ளிட்ட அம்சங்களுடன் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், ஒரு குழந்தையை மட்டும் வளர்க்கும் பெற்றோர், எதிர்பாரா காரணத்தால் அந்த குழந்தையை இழக்க நேரிட்டால் அவர்கள் பெரும் துயரத்தை எதிர்கொள்ள நேரிடும் என விஸ்வ இந்து பரிஷத் சுட்டிக்காட்டி உள்ளது.
எனவே இந்தக் கொள்கையை அம்மாநில அரசு கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

