'மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது'

'மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது'

2 mins read
28536972-ee6d-4ab7-a914-5c96bfbe3d72
இந்தியாவில் தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள கோசபா தீவில் வசிப்பவர்களுக்கு தடுப்பூசி போடச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் படகில் பயணம் மேற்கொண்டு தீவை அடைந்தனர். படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: கொரோனா மூன்­றா­வது அலையை தவிர்க்க இய­லாது என இந்­திய மருத்­துவ சங்­கம் தெரி­வித்­துள்­ளது.

எனவே அதி­க­மா­கப் பாதிக்­கப்­ப­டக் கூடாது எனில் மக்­கள் கூட்­டங்­களை தவிர்க்க வேண்­டும் என்று அச்­சங்­கம் அறி­வு­றுத்தி உள்­ளது. மேலும், மத்­திய - மாநில அர­சு­கள் இது தொடர்­பாக உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என­வும் மருத்­துவ சங்­கம் வலி­யு­றுத்தி உள்­ளது.

வழி­பாட்­டுத் தலங்­கள், சுற்­று­லாத் தலங்­கள் திறக்­கப்­பட்டு இருப்­ப­தால் கொரோனா மூன்­றாம் அலை மிக­வும் விரை­வில் ஏற்­பட வாய்ப்­பு­கள் உள்­ளன. கொரோனா தொற்­றுப்­ப­ர­வல் தொடர்­பாக அனைத்­து­லக அள­வில் நமக்கு இது­வரை கிடைத்­துள்ள தர­வு­க­ளை­யும் சான்­று­க­ளை­யும் வைத்து பார்த்­தால், மூன்­றா­வது அலை தவிர்க்க முடி­யா­தது என்­பதே சரி," என்று மருத்­துவ சங்­கம் எச்­ச­ரித்­துள்­ளது.

மக்­கள் கூட்­ட­மாக கூடும் நிகழ்­வு­கள்­தான் மூன்­றா­வது அலை­யின் துவக்­கப் புள்ளி என்­றும், கூட்­டம் கூடு­வது அறவே தவிர்க்­கப்­பட வேண்­டும் என்­றும் அச்­சங்­கம் கேட்­டுக் கொண்­டுள்­ளது.

நாட்­டின் பல்­வேறு பகு­தி­களில் கொரோனா வழி­காட்­டும் நெறி­மு­றை­களை பலர் பயன்­ப­டுத்­து­வ­தில்லை என்று குறிப்­பிட்­டுள்ள இந்­திய மருத்­துவ சங்­கம், தடுப்­பூசி போட்­டுக் கொள்­ளா­த­வர்­கள் இவ்­வாறு ஒன்­று­கூட அனு­ம­திப்­பது மூன்­றா­வது அலையை உறுதி செய்­வது போன்­றது எனத் தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வில் கொரோனா மூன்­றா­வது அலை ஏற்­கெ­னவே தொடங்­கி­விட்­ட­தாகச் சொல்­கி­றார் பிர­பல இயற்­பி­யல் நிபு­ணர் விபின் ஸ்ரீவஸ்­தவா.

ஹைத­ரா­பாத் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் முன்­னாள் உதவித் துணை வேந்­த­ரான இவர், கடந்த நான்­காம் தேதியே மூன்­றா­வது அலை தொடங்­கி­விட்­ட­தா­கச் சொல்­கி­றார்.

"இந்­தி­யா­வில் கொரோனா பாதிப்பு தொடங்­கி­ய­தில் இருந்து கடந்த 461 நாள்க­ளாக பாதிப்பு, உயி­ரி­ழப்பு உள்­ளிட்ட புள்­ளி­ வி­வ­ரங்­களை ஆய்வு செய்து மூன்று அளவீ­டு­களை உரு­வாக்கி உள்­ளேன்.

"அவற்­றைக் கொண்டு கணக்­கி­டும்­போது, இரண்­டா­வது அலை­யின்­போது நிகழ்ந்­தது போன்றே மரண எண்­ணிக்கை ஏற்ற இறக்­க­மா­கப் பதி­வாகி வரு­கிறது. எனவே மூன்­றா­வது அலை தொடங்கி இருக்க வேண்­டும். கவ­ன­மா­கச் செயல்­ப­டா­விட்­டால் அது மேலும் தீவி­ர­ம­டை­யும்," என விபின் ஸ்ரீவஸ்­தவா எச்­ச­ரித்­துள்­ளார்.