புதுடெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகள் தேர்தல் களம் காண்பதில் தவறேதும் இல்லை என விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் விவசாயிகள் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.
"தேர்தல்களில் வாக்களித்து வெற்றி பெற வைப்பது விவசாயிகள் தான். அந்த விவசாயிகள் தேர்தல்களில் போட்டியிடுவது எப்படி தவறாகும்?" என கேள்வி எழுப்பியுள்ளார் ராகேஷ் திகாயத்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், குஜராத் ஆகிய எட்டு மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

