ஸ்வப்னா: எனக்கு ஆபத்து

ஸ்வப்னா: எனக்கு ஆபத்து

1 mins read
5c2cb80b-bd0e-4570-b84a-b1d17a862b0e
-

திரு­வ­னந்­த­புரம்: ஐக்­கிய அமீ­ரக சிற்­ற­ரசு தூத­ர­கத்­தின் பெய­ரைப் பயன்­ப­டுத்தி தங்­கக்­க­டத்­த­லில் ஈடு­பட்ட ஸ்பவ்னா சிறை­யில் தமது உயி­ருக்கு ஆபத்து இருப்­ப­தாக கூறி­யுள்­ளார்.

எனவே, தம்மை கேர­ளா­வில் உள்ள வேறு சிறைக்கோ அல்­லது வேறு மாநில சிறைக்கோ மாற்ற வேண்­டும் என அவர் சார்­பில் கேரள உயர் நீதி­மன்­றத்­தில் மனு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

திரு­வ­னந்­த­பு­ரம் மத்­திய சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்ள ஸ்வப்­னாவை வேறு மாநில சிறைக்கு மாற்­று­வது குறித்து அவர் மீது வழக்கு தொடுத்­துள்ள மத்­திய சுங்க இலாகா ஆலோ­சித்து வரு­வ­தா­கத் தெரி­கிறது. இதே வழக்­கில் சிக்­கி­யுள்ள மேலும் இரு­வர் தங்­களை சிறை மாற்­றக் கோரி மனு அளித்­துள்­ள­னர்.