சீனாவின் வூகான் சென்று வந்ததும் இந்தியாவின் முதல் தொற்று ஏற்பட்ட கேரள மாணவிக்கு மீண்டும் தொற்று

சீனாவின் வூகான் சென்று வந்ததும் இந்தியாவின் முதல் தொற்று ஏற்பட்ட கேரள மாணவிக்கு மீண்டும் தொற்று

2 mins read
c252a9e2-6c26-45c2-97a5-583d3596449c
-

திரு­வ­னந்­த­பு­ரம்: இந்­தி­யா­வின் முத­லா­வது கொரோனா நோயா­ளி­யான கேர­ளாவின் திருச்சூரைச் சேர்ந்த மாண­விக்கு மீண்­டும் தொற்று பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இருப்­பி­னும் அவ­ருக்கு லேசான அறி­கு­றி­கள் மட்­டுமே இருப்­ப­தாக மருத்­து­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கடந்த ஆண்டு சீனா­வின் வூகான் மாநி­லத்­தில் முதன்­மு­த­லில் கண்­ட­றி­யப்­பட்ட கொரோனா கிரு­மித்­தொற்று உல­கம் முழு­வ­தும் பரவி இப்­போது உரு­மா­றத் தொடங்­கி­யது.

ஒட்­டு­மொத்த உலக நாடு­க­ளை­யும் மிக மோச­மாக முடக்கி வர­லாறு காணாத உயி­ரி­ழப்­பு­களை கொரோனா தொற்று ஏற்­ப­டுத்தி வரு­கிறது.

தற்­போது கொரோனா பர­வ­லின் 3வது அலையை எதிர்­கொண்டு வரு­கிறது. இந்­தி­யா­வில் கொரோனா 3-வது அலை பர­வல் ஏற்­கெனவே தொடங்­கி­விட்­டது என வல்­லு­நர்­கள் எச்­ச­ரித்து வரு­கின்­ற­னர்.

இந்­திய மருத்­து­வர் சங்­க­மும் இதே­போல் அடுத்­த­டுத்து எச்­ச­ரிக்கை விடுத்து வரு­கிறது.

இந்த நிலை­யில் நாட்­டின் முத­லா­வது கொரோனா நோயா­ளி­யான கேரளா திருச்­சூரைச் சேர்ந்த 21 வயது மாண­விக்கு மீண்­டும் கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

அந்த மாணவி சீனா­வின் வூகானில் இருந்து கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் 30ஆம் தேதி நாடு திரும்­பி­னார்.

அப்­போது அவ­ருக்கு நடத்­தப்­பட்ட பரி­சோ­த­னை­யில் கொரோனா தொற்று உறு­தி­யா­னது.

இத­னை­ய­டுத்து சுமார் ஒரு மாதம் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்­றார் அந்த மாணவி. ஒரு மாதச் சிகிச்­சை­யைத் தொடர்ந்து அம்­மா­ணவி குண­ம­டைந்­தார். இப்­போது டெல்லி பய­ணம் மேற்­கொள்ள அம்­மா­ணவி திட்­ட­மிட்­டி­ருந்­தார்.

இதற்­காக கொரோனா பரி­சோ­த­னை­களை அவர் மேற்­கொண்­டார். ஆன்­டி­ஜன் சோத­னை­யில் அவ­ருக்கு தொற்று இல்லை என கூறப்­பட்­டது. ஆனால், ஆர்டி பிசி­ஆர் சோத­னை­யில் லேசான அறி­கு­றி­க­ளு­டன் தொற்று உறு­தி­யா­னது.

திருச்­சூர் மாவட்ட மருத்­து­வர்­கள் அந்த மாண­வியை தீவி­ர­மா­கக் கண்­கா­ணித்து வரு­கின்­ற­னர்.

இந்­தியா முழு­தும் கடந்த 24 மணி நேரத்­தில் 38,792 புதிய தொற்­றும் 624 தொற்று மர­ணங்­களும் பதி­வாகி உள்­ளன. இது கடந்த 118 நாட்­களில் மிகக் குறைவு.

குண­ம­டைந்­த­வர்­க­ளின் விழுக்­காடு 97.28% ஆக அதி­க­ரித்­துள்­ளது. கடந்த 24 மணி நேரத்­தில் 41,000 கொவிட்-19 நோயா­ளி­கள் குண­ம­டைந்­துள்­ள­னர். 4,29,946 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

தற்­போது இந்­தி­யா­வில் தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 4,31,315 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்; கடந்த 109 நாட்­களில் இது மிகக் குறைவு.

இது மொத்த தொற்று பாதிப்பின் எண்­ணிக்­கை­யில் 1.40% ஆகும். இந்­தி­யா­வில் இது­வரை 43.40 கோடி பேருக்கு கொவிட்-19 சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக சுகா­தா­ரத்­துறை அறி­வித்­துள்­ளது.

கேரளா, மகா­ராஷ்­டிரா, அரு­ணாச்­சல பிர­தே­சம், திரி­புரா, மிசோ­ரம், ஒடிசா, சத்­தீஸ்­கர் உள்­ளிட்ட மாநி­லங்­களில் கொரோனா தொற்று அதி­க­ரித்­துள்­ளது.

இதை­ய­டுத்து அந்த மாநி­லங்­க­ளுக்கு மத்­தி­யக் குழுவை மத்­திய சுகா­தார அமைச்­ச­கம் அனுப்பி வைத்­தது.