பினராயி விஜயன்: கேரள திட்டங்களுக்கு உதவுவதாக பிரதமர் உறுதி அளித்தார்

1 mins read
647f59c7-720a-4c2d-a263-a8c98d06d40c
-

திரு­வ­னந்­த­புரம்: கேரள அரசு செயல்­ப­டுத்த உள்ள திட்­டங்­க­ளுக்கு மத்­திய அரசு இயன்ற உத­வி­க­ளைச் செய்­யும் என பிர­த­மர் மோடி வாக்­கு­றுதி அளித்­தி­ருப்­ப­தாக அம்­மா­நில முதல்­வர் பின­ராயி விஜ­யன் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், பிர­த­மர் மோடி­யு­ட­னான அண்­மைய சந்­திப்பு பய­னுள்ள வகை­யில் அமைந்­த­தாக குறிப்­பிட்­டார்.

"திரு­வ­னந்­த­பு­ரத்­தில் லைட் மெட்ரோ திட்­டம், கொச்சி மெட்­ரோ­வின் இரண்­டாம் கட்­டத் திட்­டம், எய்ம்ஸ் மருத்­து­வ­மனை ஆகிய பல்­வேறு திட்­டங்­க­ளுக்கு உத­வு­வ­தாக பிர­த­மர் மோடி உறு­தி­ய­ளித்­தார். கேர­ளா­வில் கெயில் நிறு­வ­னத்­தின் திட்­டத்தை கேரள அரசு வெற்­றி­க­ர­மாக முடிக்­கும் என்­ப­தில் பிர­த­மர் மிக­வும் மகிழ்ச்சி அடைந்­தார்.

"உள்­நாட்டு நீர்­வ­ழிப் போக்கு­வரத்து திட்­டங்­களில் ஆர்­வம் காட்­டிய பிர­த­மர், அதை கேர­ளா­வில் மேலும் பிர­ப­லப்­ப­டுத்த வேண்­டும் என்­றார்.

"வார­ணாசி-கொல்­கத்தா நீர்­வ­ழிப் பாதைத் திட்­டம் போல கேர­ளா­வி­லும் செயல்­ப­டுத்த வேண்­டும் என்று பிர­த­மர் அறி­வுரை வழங்­கி­னார்," என்­றார் முதல்­வர் பின­ராயி விஜ­யன்.

கூட்­டாட்­சித் தத்­து­வத்­தின் அடிப்­ப­டை­யில் மத்­திய அர­சு­டன் இணைந்து பணி­யாற்­று­வதை கேரள அரசு எதிர்­நோக்கி உள்­ள­தாக குறிப்­பிட்ட அவர், ஜூலை மாதத்­துக்­குள் கேர­ளா­வுக்கு ஆறு மில்­லி­யன் கொரோனா தடுப்­பூ­சி­களை வழங்க வேண்­டும் என பிர­த­மர் மோடியிடம் தாம் கோரிக்கை வைத்­த­தா­க­வும் அது தொடர்­பாக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என பிர­த­மர் உறுதி அளித்­த­தா­க­வும் தெரி­வித்­தார்.