ஜெய்சங்கர்: வன்முறை மூலம் ஆட்சியமைத்தால் உலகம் ஏற்காது

ஜெய்சங்கர்: வன்முறை மூலம் ஆட்சியமைத்தால் உலகம் ஏற்காது

2 mins read
e3be7b8f-72cc-4fe6-a279-886da91277d1
-

புது­டெல்லி: வன்­முறை மூல­மா­க­வும் வலு­கட்­டா­ய­மா­க­வும் ஆட்­சி­யைப் பறிப்­பது இந்த உல­கத்­துக்கு எதி­ரான செயல்­பாடு என இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் கூறி­யுள்­ளார்.

தஜகிஸ்­தா­னில் நடை­பெற்ற ஷாங்­காய் ஒத்­து­ழைப்பு அமைப்பு மாநாட்­டில் கலந்து கொண்டு பேசிய அவர், ஆப்­கா­னிஸ்­தான் மக்­க­ளின் எதிர்­கா­ல­மா­னது கடந்த காலத்­தில் இருந்­த­து­போல் இருக்­கக் கூடாது என்­றார்.

காபூ­லின் அண்டை நாடு­கள் பயங்­க­ர­வா­தம், தீவி­ர­வா­தம், பிரி­வி­னை­வா­தத்­தால் அச்­சு­றுத்­தப்­பட­வில்லை என்­பதை உறுதி செய்ய வேண்­டி­யது அவ­சி­யம் என்று குறிப்­பிட்ட அமைச்­சர் ஜெய்­சங்­கர், பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளுக்கு நிதி அளிக்­கப்­ப­டு­வது ஷாங்­காய் ஒத்­து­ழைப்பு அமைப்­பால் தடுத்து நிறுத்­தப்­பட வேண்­டும் என்றார்.

"பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். ஆப்கானிஸ்தானில் அமைதியின்மை, கொரோனாவால் ஏற்பட்டுள்ள சுகாதாரப் பிரச்சினை, பொருளாதார பாதிப்பு ஆகியவற்றால் நாமும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

"ஒரு பூமி, ஒரே சுகா­தா­ரம் என்ற நோக்­கத்­தில் உல­கம் முழு­தும் மக்­க­ளுக்கு தடுப்­பூசி போட வேண்­டும். ஆப்­கா­னிஸ்­தா­னில் இருந்து அமெ­ரிக்க படை­கள் திரும்ப துவங்­கி­ய­தி­லி­ருந்து, அங்கு வன்­முறை வெடித்­துள்­ளது. இது பெரும் கவ­லை­ய­ளிக்­கிறது," என்­றார் அமைச்­சர் ஜெய்­சங்­கர்.

ஆப்­கா­னிஸ்­தான் விவ­கா­ரத்­திற்கு அமை­திப் பேச்­சு­வார்த்தை மட்­டுமே ஒரே வழி என்று குறிப்­பிட்ட அவர், இதற்­கான நட­வ­டிக்­கை­களை ஷாங்­காய் ஒத்­து­ழைப்பு அமைப்பு மேற்­கொள்ள வேண்­டும் எனக் கேட்­டுக் கொண்­டார்.

இந்­நி­லை­யில், இந்­திய-சீன எல்­லைப் பகு­தி­களில் ஒரு­த­லைப்­பட்­ச­மாக மேற்­கொள்­ளப்­படும் ஆற்­றலை இந்­தியா ஏற்­காது என சீன வெளி­யு­றவு அமைச்­ச­ரி­டம் ஜெய்­சங்­கர் திட்­ட­வட்­ட­மாக வலி­யு­றுத்­தி­ய­தாக ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

ஷாங்­காய் மாநாட்­டுக்கு இடையே இரு நாடு­க­ளின் வெளி­யு­றவு அமைச்­சர்­களும் சந்­தித்­துப் பேசி­னர். அப்­போது எல்லை பிரச்­சினை குறித்து விவா­திக்­கப்­பட்­ட­து.

இம்­மா­நாட்­டில் சீனா, ரஷ்யா, கஜ­கஸ்­தான், கிர்­கிஸ்­தான், உஸ்­பெ­கிஸ்­தான், இந்­தியா, பாகிஸ்­தான் உள்­ளிட்ட நாடு­க­ளின் வெளி­யு­றவு அமைச்­ச­கர்­கள் பங்கேற்றனர்.