தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடுக்கடலில் படகு கவிழ்ந்து ஒன்பது மீனவர்கள் பலி

1 mins read
403fcaaf-3909-4f7c-a403-58a951dbc03c
-

கோல்கத்தா: மீன்பிடி படகு நடுக்கடலில் கவிழ்ந்த விபத்தில் ஒன்பது மீனவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பத்து மீனவர்கள் சென்ற படகு, புதன்கிழமை அதிகாலை வேளையில் வங்காள விரிகுடா கடற்பகுதியில் திடீரென மூழ்கியது.

இதில் படகில் இருந்த ஒன்பது மீனவர்கள் இறந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் மட்டும் என்ன ஆனார் என்பது இதுவரை தெரியவில்லை.

தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரையில் இருந்து சுமார் முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் படகு கவிழ்ந்ததாக குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், படகு கவிழ்ந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடப்பதாக தெரிவித்துள்ளனர்.