பணம் அச்சடிக்கும் அச்சகத்திலிருந்து ரூ.5 லட்சம் மாயம்

பணம் அச்சடிக்கும் அச்சகத்திலிருந்து ரூ.5 லட்சம் மாயம்

1 mins read
6ee7a5d5-122d-480b-9731-58baa232c9fe
-

மும்பை: இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் நாசிக் அச்சகத்தில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் மாயமாகி உள்ளன.

அவை அனைத்தும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் என்றும் கடந்த பிப்ரவரி 12 முதல் கடந்த 12ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நோட்டுகள் மாயமானதாக தெரிய வந்துள்ளது.

பல அடுக்குப் பாதுகாப்பை மீறி நோட்டுகள் மாயமானது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர போலிசார் வழக்குப் பதிவு செய்து அச்சகத்தில் பணியாற்றுபவர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தி வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.