மத்திய பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் 50 அடி ஆழம் கொண்ட கிணறு ஒன்றில் விழுந்த ஒரு சிறுவனைக் காப்பாற்ற ஊர்க்காரர்கள் முயன்றுகொண்டிருந்தபோது அந்தக் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அவர்களில் குறைந்தது 20 பேர் விழுந்ததைத் தொடர்ந்து குறைந்தது நால்வர் மாண்டனர். அத்துடன 19 பேர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
50 அடி ஆழம் கொண்ட அந்தக் கிணற்றுக்குள் விழுந்த அச்சிறுவனைக் காப்பாற்ற ஊர்க்காரர்கள் முயன்றுகொண்டிருந்தபோது கிணற்றின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அவர்கள் விழுந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
கன்ஜ் பசோடாவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. சம்பவத்தைப் பற்றி பேசி மத்திய பிரதேசத்தின் முதல் அமைச்சர் சிவராஷ் சௌகன், மீட்புப் பணி தொடர்வதாகவும் அதிகாரிகளுடன் தாம் அணுக்கமான தொடர்பில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.
காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இத்தகவல்களை இந்திய பிரஸ் டிரஸ்ட் செய்தி நிறுவனம் கூறியது, கன்ஜ் பசோடாவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

