பியூஷ் கோயல்: உலக மீன்பிடித் தொழில்களில் சமமான வளர்ச்சி வாய்ப்பு வேண்டும்

புதுடெல்லி: ஒரு சில நாடு­க­ளின் மிகை­யான மீன்­பி­டிப்­பால் இந்­திய மீன­வர்­களின் மீன்பிடி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தவறுசெய்யும் நாடு­க­ளுக்கு ஆத­ர­வாக உலக வர்த்­தக அமைப்பு செயல்­ப­டு­வ­தா­க­வும் அமைச்­சர் பியூஷ் கோயல் (படம்) கூறினார்.

மீன்­பிடித்தொழில் மானிய பேச்சு­வார்த்­தை­கள் பற்றி உலக வர்த்­தக அமைப்­பின் அமைச்­ச­கங்­கள் இடை­யே­யான கூட்­டம் கடந்த வியாழக்கிழமை நடை­பெற்­றது.

உலக வர்த்­தக அமைப்­பின் தலைமை இயக்­கு­நர் டாக்­டர் நிகோசி, இதர உறுப்பு நாடு­க­ளின் அமைச்­சர்­கள் மற்­றும் தூதர்­கள் இந்­தக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்­ட­னர்.

இந்­தக் கூட்­டத்­தில் வளர்ந்து வரும் நாடு­க­ளின் உரி­மை­கள் பற்றி மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர் பியூஷ் கோயல் கடு­மை­யா­கப் பேசி­னார்.

இந்­தியா சார்­பாக கடு­மை­யான வாதத்தை முன்­வைத்த கோயல், இந்த ஒப்­பந்­தத்தை இறுதி செய்­வ­தில் இந்­தியா தீவி­ர­மாக இருப்­ப­தா­க­வும், முர­ணான மானி­யங்­கள் மற்­றும் ஒரு சில நாடு­க­ளின் மிகை­யான மீன்­பி­டிப்­பால் இந்­திய மீன­வர்­களும் அவர்­க­ளது வாழ்­வா­தா­ர­மும் பெரி­தும் பாதிக்­கப்­பட்டு இருப்­ப­தா­க­வும் கூறி­னார்.

இந்த ஒப்­பந்­தத்­தில் சம அளவு மற்­றும் நேர்மை இன்­னும் கண்­ட­றி­யப்­ப­டா­தது குறித்து அவர் வருத்­தம் தெரி­வித்­தார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்­னர் உரு­குவே சுற்­றின்­போது மேற்­கொண்ட தவ­று­க­ளால், வேளாண்மை போன்ற துறை­களில் குறிப்­பிட்ட வளர்ந்த உறுப்பு நாடு­க­ளுக்கு ஏற்­பட்ட பாதிப்­பைப் போன்று தற்­போதும் நாம் தவறு செய்­யக்­கூ­டாது என்று அவர் எச்­ச­ரிக்கை விடுத்­தார். மீன்­வ­ளத் திறன்­களை இன்­னும் மேம்­ப­டுத்தவேண்­டிய இந்­தியா உள்­ளிட்ட நாடு­க­ளால் தங்­க­ளது எதிர்­கால லட்­சி­யங்­களைத் தியா­கம் செய்ய முடி­யாது என்று கோயல் தெளி­வுப­டுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!