உச்ச நீதிமன்றம்: புறாக்கள் உத்தரவுகளை ஏந்தி வரவில்லை

உச்ச நீதிமன்றம்: புறாக்கள் உத்தரவுகளை ஏந்தி வரவில்லை

1 mins read
f31ed406-653d-4641-9078-c15cd000b162
-

புது­டெல்லி: நீதி­மன்ற உத்­த­ர­வு­களை மத்­திய, மாநில அர­சு­கள் உட­ன­டி­யாக அமல்­ப­டுத்த வேண்­டும் என உச்ச நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

நீதி­மன்­றம் உத்­த­ர­விட்ட பின்­ன­ரும் சிலரை பிணை­யில் விடு­விப்­ப­தில் தாம­தம் ஏற்­ப­டுத்­து­வது தவ­றான போக்கு என்­றும் நீதி­ப­தி­கள் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

உத்­த­ரப் பிர­தே­சத்­தில் நிகழ்ந்த கொலை தொடர்­பான வழக்­கில் 13 பேர் கைதாகி சிறை­யில் உள்­ள­னர். 14 முதல் 22 ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள 13 பேருக்­கும் பல்­வேறு முயற்­சி­க­ளுக்­குப் பின்­னர் உச்ச நீதி­மன்­றம் கடந்த 8ஆம் தேதி பிணை வழங்கி உத்­த­ர­விட்­டது.

எனி­னும், 13 பேர் இன்­னும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை என ஊட­கத்­தில் செய்­தி­கள் வெளி­யா­கின. இது குறித்து உச்ச நீதி­மன்­றம் தாமாக முன்­வந்து விசா­ரணை நடத்தி வரு­கிறது.

அப்­போது பல வழக்­கு­களில் நீதி­மன்ற உத்­த­ர­வு­களை அமல்­ப­டுத்­து­வ­தில் தாம­தம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக நீதி­ப­தி­கள் தெரி­வித்­த­னர்.

"இது தக­வல் தொழில்­நுட்­பக் காலம். இப்­போ­தும் நாம் உத்­த­ர­வு­களை ஏந்தி வரும் புறாக்­க­ளுக்­காக வானத்தை அண்­ணாந்து பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றோம் என்­கி­றீர்­கள்.

"இந்த மின்­னி­லக்க உல­கில் நீதி­மன்ற உத்­த­ர­வு­களை அமல்­ப­டுத்த பாது­காப்­பாக, நம்­ப­க­மாக, விரை­வாக அவற்­றைப் பரி­மாற்­றம் செய்­யும் புதிய தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்த பரி­சீ­லித்து வரு­கி­றோம்.

"இந்த திட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் உடனுக்குடன் உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றம், சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படும். இதன் மூலம் தாமதங்கள் தவிர்க்கப்படும்," என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மேலும் தெரிவித்தனர்.