மும்பையிலுள்ள புறநகர்ப்பகுதியில் பெய்த கனமழையால் பல வீடுகள் தரைமட்டமானதில் குறைந்தது 15 பேர் உயிர் இழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
உடல்களை மீட்க பலர் தங்கள் கைகளைக் கொண்டு மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்ததாக உள்ளூர் தொலைக்காட்சி அறிக்கைகள் சுட்டின. மேலும் பலர் கட்டட இடர்பாடுகளுக்கு இடையே சிக்கி இருக்கக்கூடும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
காயமடைந்தோரில் நால்வர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

