கேரள போலிஸ்: இன்ஸ்டகிராமில் பின்தொடரும் மில்லியன் பேர்

கேரள போலிஸ்: இன்ஸ்டகிராமில் பின்தொடரும் மில்லியன் பேர்

1 mins read
593e2755-5cda-4a4b-9ea8-b5cae2962f11
-

திருவனந்தபுரம்: கேரள காவல்துறையை இன்ஸ்டகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

இதன் மூலம் இன்ஸ்டகிராம் தளத்தில் இயங்கி வரும் ராஜஸ்தான், கர்நாடக காவல்துறையை கேரளா விஞ்சியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு கேரள காவல் துறை குறித்து உலக மக்க ளும் அறியும் வகையில் சமூக வலைத்தளங்களில் கணக்குகள் தொடங்கப் பட்டன.

அதன் பின்னர் பல்வேறு தகவல்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை அவற்றில் பதிவிடப்பட்டன. அவற்றை ஏராளமானோர் பார்த்து வந்ததை அடுத்து, பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு மில்லியனைக் கடந்துள்ளது. இதன் மூலம் இன்டர்போல், அமெரிக்காவின் நியூ யார்க் காவல்துறை ஆகிய வற்றுக்கு இணையாக கேரள போலிசாரின் புகழ் பரவி வருவதாகவும் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

கேரள போலிசின் 'ஃபேஸ்புக்' பக்கத்தையும் 1.7 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.