கர்நாடகாவில் திரையரங்குகள், கல்லூரிகளைத் திறக்க அனுமதி

கர்நாடகாவில் திரையரங்குகள், கல்லூரிகளைத் திறக்க அனுமதி

3 mins read
7f75ac45-7184-487c-9400-3b65bed2cd42
-

டெல்லியில் கொரோனா பலி இல்லாத நாள்; ஊரடங்கு தளர்வால் கேரளாவில் சர்ச்சை

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் கொரோனா தொற்­றுப் பர­வல் குறைந்து வரு­வதை அடுத்து அங்கு கல்­லூ­ரி­கள், திரை­ய­ரங்­கு­களைத் திறக்க அம்­மா­நில அரசு அனு­மதி அளித்­துள்­ளது.

எனி­னும், இது தொடர்­பான சில கட்­டுப்­பா­டு­களும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

தொற்­றுப் பர­வல் குறைந்­ததை அடுத்து கர்­நா­ட­கா­வில் பல்­வேறு ஊர­டங்கு தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. அதன்­படி, திரை­ய­ரங்­கு­களில் ஐம்­பது விழுக்­காடு இருக்­கை­களை நிரப்ப அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

பெரிய வணிக வளா­கங்­களில் இயங்­கும் திரை­ய­ரங்­கு­க­ளுக்­கும் இந்த நிபந்­தனை பொருந்­தும். பெரிய அரங்­கு­களில் நடை­பெ­றும் நிகழ்ச்­சி­க­ளி­லும் 50 விழுக்­காடு இருக்­கை­களை மட்­டுமே பயன்­படுத்த இய­லும்.

எதிர்­வ­ரும் 26ஆம் தேதி முதல் கல்­லூ­ரி­கள், பல்­க­லைக்­க­ழ­கங்­கள் உள்­ளிட்ட உயர் கல்வி நிறு­வ­னங்­கள், அமைப்­பு­கள் செயல்­ப­ட­லாம். எனி­னும் இந்த இடங்­களில் பணி­யாற்­று­ப­வர்­கள், படிப்­ப­வர்­கள் அனை­வ­ரும் குறைந்­த­பட்­சம் ஒரு தவணை தடுப்­பூ­சி­யா­வது போட்டுக்­கொள்ள வேண்­டும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நேரடி வகுப்­பு­களில் பங்­கேற்க வேண்­டும் எனும் கட்­டா­யம் மாண­வர்­க­ளுக்கு இல்லை. விருப்­பம் உள்­ள­வர்­கள் மட்­டும் பங்­கேற்­க­லாம்.

நேற்று முன்தினம் கர்நாடகாவில் 1,869 பேர் பாதிக்கப்பட்டனர். 42 பேர் பலியாகிவிட்டனர்.

கர்­நா­ட­கா­வில் நேற்று முன்­தினம் 1869 பேருக்கு கொரோனா தொற்று இருப்­பது உறு­தி­யா­னது. மேலும் 42 பேர் பலி­யா­கி­விட்­ட­னர். அங்கு இரவு 10 முதல் அதி­காலை 5 மணி­வரை ஊர­டங்கு அம­லில் இருந்து வரு­கிறது.

இந்திய நில­வ­ரம்

இந்தியாவில் நேற்று முன்தினம் 38,164 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அன்றைய தினம் 499 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சு, அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

டெல்லி நில­வ­ரம்

இதற்­கி­டையே டெல்­லி­யில் நேற்று முன்­தி­னம் கொரோனா கிருமித்­தொற்று தொடர்­பான மர­ணச் சம்­ப­வங்­கள் ஏதும் பதி­வா­க­வில்லை. அங்கு தொற்­றுப் பர­வல் கட்­டுக்­குள் வந்­துள்­ளது.

முன்பு நாள்­தோ­றும் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் பாதிக்­கப்­பட்டு வந்த நிலை­யில், அண்­மைய சில தினங்­க­ளாக இரட்டை இலக்­கத்­திலேயே புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­கின்­றன. நேற்று முன்­தி­னம் புதி­தாக 51 பேரை கிருமி தொற்­றி­யுள்­ளது. எனி­னும் உயிரிழப்பு­கள் ஏதும் பதி­வா­க­வில்லை. அம்மாநிலத்­தில் ஒட்­டு­மொத்த மரண எண்­ணிக்கை 25,027 ஆகும். இந்­நி­லை­யில் உயி­ரி­ழப்பு இல்­லாத நாள் டெல்­லி­வா­சி­களை உற்­சா­கப்­ப­டுத்தி உள்­ளது.

கேரள நில­வ­ரம்

கேர­ளா­வில் தொற்­றுப் பர­வல் இன்­னும் கட்­டுக்கு வராத நிலை­யில், பக்­ரீத் நிகழ்­வை­யொட்டி அறி­விக்­கப்­பட்­டுள்ள ஊர­டங்கு தளர்­வு­கள் விவா­தங்­களை எழுப்­பி­யுள்­ளன.

கடந்த 71 நாட்­க­ளாக அம்­மா­நி­லத்­தில் கடும் ஊர­டங்கு கட்­டுப்­பா­டு­கள் அம­லில் உள்­ளன. எனவே அரசு சில தளர்­வு­களை அறி­வித்­துள்­ளது ஆறு­த­லாக இருப்­ப­தாக ஒரு தரப்­பி­னர் கூறி­யுள்­ள­னர்.

இதே வேளை­யில், அர­சின் இந்த நட­வ­டிக்­கையை காங்­கி­ரஸ் கட்சி விமர்­சித்­துள்­ளது.

"வட இந்­தி­யா­வில் கன்­வார் யாத்­திரை நடப்­பது தவறு எனில், அது பக்­ரீத் பொது கொண்­டாட்ட நிகழ்­வு­க­ளுக்­கும் பொருந்­தும். கேரளாதான் இப்­போது கொரோனா தொற்­றுப் பர­வ­லால் நாட்­டில் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது," என காங்­கி­ரஸ் செய்­தித் தொடர்­பா­ளர் அபி­ஷேக் சிங்வி கூறி­யுள்­ளார்.

இந்­திய மருத்­துவச் சங்­க­மும் கேரள அர­சின் அறி­விப்­புக்கு எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது.

நாடு கொரோனா மூன்­றா­வது அலையை எதிர்­நோக்­கி­யுள்ள வேளை­யில் ஊர­டங்கு தளர்­வு­களை அறி­விப்­பது சரி­யான நட­வ­டிக்கை அல்ல என்­றும் கேரள அரசு தனது அறி­விப்பை உட­ன­டி­யா­கத் திரும்­பப் பெற வேண்­டும் என்றும் அச்­சங்­கம் வலி­யு­றுத்தி உள்­ளது.

கேர­ளா­வில் நேற்று முன்­தி­னம் புதிதாக 13,956 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.