அமளிக்கு மத்தியில் மக்களவையில் பதவி ஏற்றார் விஜய் வசந்த்

அமளிக்கு மத்தியில் மக்களவையில் பதவி ஏற்றார் விஜய் வசந்த்

1 mins read
889a602e-6aad-400b-a53e-9e0368bfdd4a
-

புது­டெல்லி: கன்­னி­யா­கு­மரி மக்களவை தொகுதி உறுப்­பி­னர் விஜய் வசந்த் உள்­ளிட்ட நான்கு புதிய எம்­பிக்­க­ளுக்கு சபா­நா­ய­கர் ஓம்­பிர்லா நேற்று பத­விப்­பி­ர­மா­ணம் செய்து வைத்­தார்.

நாடா­ளு­மன்ற மழைக்­கால கூட்­டத்­தொ­டர் நேற்று தொடங்­கி­யது. முத­லில் புதிய எம்­பி­க்கள் பதவி­ ஏற்­றுக்கொண்­ட­னர். தமி­ழில் பதவி­ஏற்­றுக்கொண்ட விஜய் வசந்த், 'பெருந்­த­லை­வர் காம­ரா­ஜ­ரின் புகழ் வாழ்க', 'ராஜீவ் காந்தி வாழ்க' என்று குறிப்­பிட்­டார்.

மறைந்த மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது. பின்­னர், பிர­த­மர் மோடி தமது அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெற்­றுள்ள புதிய அமைச்­சர்­களை அவை­யில் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். அப்­போது எதிர்க்­கட்­சி­யி­னர் அமளி­யில் ஈடு­பட்­ட­னர்.

அமைச்­ச­ர­வை­யில் பழங்­கு­டி­யினத்­தைச் சேர்ந்த பெண்­க­ளுக்கு வாய்ப்பு அளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட பிரதமர் மோடி, புதிய அமைச்­சர்­களில் பலர் விவ­சா­யி­க­ளின் பிள்­ளை­கள் என்­றார்.

எனி­னும் அவர் பேசிக்கொண்­டி­ருந்­த­போது எதிர்க்­கட்சி எம்­பிக்­களின் அமளி அதி­க­ரித்­த­தால், மக்­க­ளவை நட­வ­டிக்­கை­கள் இரண்டு முறை ஒத்திவைக்­கப்­பட்­டது.

இதற்­கி­டையே மூத்த இந்தி நடி­கர் திலீப் குமார், தட­கள வீரர் மில்கா சிங் ஆகி­யோ­ரின் மறை­வுக்கு மாநி­லங்­க­ள­வை­யில் அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது. இதை­யடுத்து அவை நட­வ­டிக்­கை­கள் மதி­யம் 12.30 மணி வரை ஒத்திவைக்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது.

முன்­ன­தாக பெட்­ரோல், டீசல் விலை உயர்­வைக் கண்­டித்து திரிணா­முல் காங்­கி­ரஸ் கட்சி எம்­பிக்­கள் நேற்று நாடா­ளு­மன்­றத்­திற்கு சைக்­கி­ளில் வந்­த­னர்.