கோவாக்ஸ் திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 75 லட்சம் தடுப்பூசி

கோவாக்ஸ் திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 75 லட்சம் தடுப்பூசி

1 mins read
eb99a5d0-4a99-47db-ad20-11a7dfd17673
-

புது­டெல்லி: கோவாக்ஸ் திட்­டத்­தின் கீழ் இந்­தி­யா­வுக்கு விரை­வில் 75 லட்­சம் மொடர்னா தடுப்­பூசி மருந்து வழங்­கப்­பட உள்­ளது என உலக சுகா­தார அமைப்பு தெரி­வித்­துள்­ளது. இது குறித்து அந்த அமைப்­பின் தென்­கி­ழக்கு ஆசிய மண்­டல இயக்­கு­நர் மருத்­து­வர் பூனம் கேத்­ர­பால் நேற்று தெரி­வித்­தார். ஆனால், அந்த மருந்­து­கள் எப்போது வழங்­கப்­படும் என்ற விவ­ரங்­களை அவர் வெளி­யி­ட­வில்லை. மத்­திய அர­சின் அனு­ம­தி­யைப் பொறுத்து தடுப்­பூசி வழங்­கப்­படும் எனத் தெரி­கிறது.

இதற்­கி­டையே, நிதி­ஆ­யோக்­கின் சுக­தார உறுப்­பி­னர் வி.கே. பால் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கூறு­கை­யில் "மொடர்னா மற்­றும் ஃபைசர் தடுப்­பூசி நிறு­வ­னங்­க­ளி­டம் மத்­திய அரசு பேச்சு நடத்தி வரு­கிறது. விரை­வில் தடுப்­பூ­சி­களை இறக்­கு­மதி செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் தொடங்­கும்," எனத் தெரி­வித்­தி­ருந்­தார்.

மேலும், இந்­தத் தடுப்­பூ­சி­கள் எப்­போது இந்­தி­யா­விற்கு வழங்­கப்­படும் என்ற கேள்­விக்­குப் பதி­ல­ளித்த அவர், "அது சட்­டப் பாது­காப்பு வழங்­கப்­ப­டு­வ­தைப் பொறுத்­தது," என கூறி­யுள்­ளார்.

ஏற்கனவே ஃபைசர் உள்ளிட்ட தடுப்பூசி நிறுவனங்கள், சட்டப் பாதுகாப்பு பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் மாதம் அமெ­ரிக்­கா­வின் மொடர்னா தடுப்­பூசி தயா­ரிக்­கும் நிறு­வ­னம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் "அவ­ச­ர­காலப் பயன்­பாட்­டுக்­காக இந்­தி­யா­வில் மொடர்னா தடுப்­பூசி இறக்­கு­ம­திக்கு இந்­தியா அனு­ம­தி­ய­ளித்­துள்­ளது," எனத் தெரி­வித்­தது.

இந்­தி­யா­வில் கொவிட்-19க்கு எதி­ராக, கோவி­ஷீல்ட், கோவாக்­சின் ஆகிய தடுப்­பூ­சி­கள் மக்­க­ளுக்கு முழு வீச்­சில் செலுத்­தப்­பட்டு ­வ­ரு­கின்­றன. ஸ்புட்­னிக் 'வி' தடுப்­பூசி, இந்­தி­யா­வில் இன்­னும் வர்த்­தக ரீதி­யி­லான பயன்­பாட்­டிற்கு வர­வில்லை.