பெகாசஸ் ஒட்டுக்கேட்பு: கண்டித்து மாபெரும் போராட்டம்

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு: கண்டித்து மாபெரும் போராட்டம்

2 mins read
96eb82fa-4875-444d-a8eb-47b25f002e05
அர­சி­யல் தலை­வர்­க­ளின் கைத்­தொ­லை­பேசி உரை­யா­டல்­கள் ஒட்­டுக் கேட்­கப்­பட்டதைக் கண்டித்து நேற்று புதுடெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ்காரர்களை போலிசார் கட்டுப்படுத்துகின்றனர். படம்: ஏஎப்பி -

புதுடெல்லி: இஸ்­ரே­லின் 'என்­எஸ்ஓ' அமைப்­பின் பெகா­சஸ் ஒட்­டுக் கேட்பு செயலி மூலம் பல்­வேறு அர­சி­யல் தலை­வர்­க­ளின் கைத்­தொ­லை­பேசி உரை­யா­டல்­கள் ஒட்­டுக் கேட்­கப்­பட்ட விவ­கா­ரத்­தில் உள்­துறை அமைச்­சர் அமித்ஷாவை பதவி நீக்­கம் செய்ய வேண்­டும், பிர­த­மர் மோடி­யி­டம் விசா­ரணை நடத்த வேண்­டும் என்று காங்­கி­ரஸ் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. அத்­து­டன் ஒட்­டுக்­கேட்­ட­தைக் கண்­டித்து டெல்­லி­யில் காங்­கி­ரஸ்­கா­ரர்­கள் மாபெ­ரும் போராட்­டத்­தில் ஈடுபட்டனர். பிரான்­சைச் சேர்ந்த லாப நோக்­க­மற்ற அமைப்­பான ஃபர்­மி­டன் ஸ்டோ­ரிஸ் மற்­றும் அம்­னெஸ்டி இன்­டர்­நே­ஷ­னல் ஆகி­யவை இணைந்து புல­னாய்வு செய்து ஒட்டு கேட்­பைக் கண்­டு­பிடித்­துள்­ள­ன.

"பெகா­சஸ் ஒட்­டுக் கேட்பு செயலி குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் விவா­தம் நடத்த வேண்­டும். இந்த விவா­தத்தை எவ்­வாறு கையாள்­வது என்பது குறித்து எதிர்க்­கட்­சி­கள் சார்­பில் ஆலோ­ச­னைக் கூட்­டம் நடத்­தப்­பட்டு முடிவு எடுக்­கப்­படும்," என்று காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­மைச் செய்­தித்­தொடர்­பா­ளர் ரன்­தீப் சிங் சுர்­ஜே­வாலா கூறினார்.

மாநி­லங்­க­ளவை எதிர்க்­கட்­சித் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே, மக்­க­ளவை எதிர்க்­கட்­சித் தலை­வர் ஆதிர் ரஞ்­சன் சவுத்ரி ஆகி­யோர் இதைக் கண்­டித்து இது­கு­றித்து செய்­தி­யா­ளர்­க­ளுக்­குப் பேட்­டி­ய­ளித்­த­னர்.

"பெகா­சஸ் ஒட்­டுக் கேட்பு விவ­கா­ரத்­துக்­குப் பொறுப்­பேற்று உள்­துறை அமைச்­சர் அமித்ஷாவை உட­ன­டி­யாக பதவி நீக்­கம் செய்ய வேண்­டும்.

"இந்த விவ­கா­ரத்­தில் பிர­த­மர் மோடி­யின் பங்கு என்ன என்­பது குறித்து விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும்.

"இந்­திய பாது­காப்­புப் படை­கள், கேபி­னெட் அமைச்­சர்­கள், எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள், செய்தி­யா­ளர்­கள், சமூக செயல்­பாட்­டா­ளர்­களை வெளி­நாட்டு உளவு செயலி மூலம் உளவு பார்த்­தது என்­பது, தேசத்­து­ரோ­கம் மட்­டு­மல்ல, தேசப்­பா­து­காப்­புக்கு மன்­னிக்க முடி­யாத விதி­முறை மீறல்.

அரசியலமைப்புச் சட்டம் காலில்போட்டு மிதிக்கப்பட்டுள்ளது, சட்டத்தின் ஆட்சி கொலை செய்யப்பட்டுள்ளது, பிரதமர், உள்துறை அமைச்சர், இந்த அரசின் பதவிப் பிரமாணம் என்பது பொய்யானது என்பது தெரிந்துவிட்டது," இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்தார்