'மருத்துவமனைகளின் பாதுகாப்பு அம்சங்கள் தணிக்கை செய்யப்படவேண்டும்'

'மருத்துவமனைகளின் பாதுகாப்பு அம்சங்கள் தணிக்கை செய்யப்படவேண்டும்'

2 mins read
98482140-b704-4bbd-92fa-6fb3c6d10bd3
-

புது­டெல்லி: மருத்­து­வ­ம­னை­களில் கொரோனா தொற்று நோயா­ளி­க­ளுக்கு முறை­யாக சிகிச்சை அளிக்­கப்­ப­டா­தது, தொற்­றால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் உடல்­க­ளைக் கண்­ணி­ய­மா­கக் கையா­ளா­தது, மருத்­து­வ­ம­னைத் தீ விபத்­து­கள் உள்ளிட்டவை குறித்து உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் விவா­திக்­கப்­பட்­டது.

கட்­டட விதி­மு­றை­க­ளைக் கடைப்­பி­டிக்­கா­மல் கட்­டப்­பட்ட மற்­றும் குடி­யி­ருப்­புப் பகு­தி­களில் அடுக்கு வீடு­க­ளைப் போன்ற மருத்­து­வ­ம­னை­கள் குறித்து, உச்ச நீதி­மன்­றம் தாமாக வழக்­குப் பதிந்து விசா­ரணை மேற்­கொண்டு வரு­கிறது.

மகாராஷ்­டிரா, குஜ­ராத் ஆகிய மாநி­லங்­களில் உள்ள அரசு மருத்­து­வ­ம­னை­களில் கடந்த ஆண்டு தீ விபத்­து­கள் நடந்­தன. அதில் ஏரா­ள­மான நோயா­ளி­கள் உயி­ரி­ழக்க நேரிட்­டது.

இந்­தச் சம்­ப­வத்தை அடிப்­ப­டை­யாக வைத்து உச்ச நீதி­மன்­றம் வழக்­காக எடுத்­தது.

நாட்­டில் உள்ள மருத்­து­வ­ம­னை­களை வீடு­கள் விற்­கும் சொத்து நிறு­வ­னங்­க­ளாக நாங்­கள் பார்ப்­பதா அல்­லது மனி­தர்­க­ளுக்­குச் சேவை யாற்­றும் நிறு­வ­னங்­க­ளா­கப் பார்ப்­பதா? என்று நீதி­ப­தி­கள் கேள்வி எழுப்­பி­னர்.

"மனி­தர்­கள் துய­ரத்­தில் வாடும் போது அதைப் பயன்­ப­டுத்தி செழித்து வளர்ந்து மருத்­து­வ­ம­னை­கள் பெரிய தொழில் கூடங்­க­ளாக மாறி­யுள்­ளன.

"மனித உயிர்­க­ளைக் கொடுத்து­தான் மருத்­து­வ­ம­னை­க­ளின் வளர்ச்சி என்­றால் அதை நாங்­கள் ஒரு­போ­தும் அனு­ம­திக்­க­மு­டி­யாது. அது­போன்ற மருத்­து­வ­ம­னை­களை மூடி­வி­ட­லாம்.

"அதற்­குப் பதி­லாக மாநில அர­சு­கள் தேவை­யான மருத்­து­வக் கட்­ட­மைப்பை உரு­வாக்­க­லாம்.

"அடுக்­கு­மா­டிக் கட்­டட வீடு­க­ளைப் போன்று நான்கு அறை­களை மட்­டுமே வைத்­துக்­கொண்டு அதை ஒரு மருத்­து­வ­மனை என்று கூறு­வதை ஏற்­க­மு­டி­யாது.

"இது­போன்ற மருத்­து­வ­ம­னை­களில் தீ தடுப்­புப் பாது­காப்பு ஏற்­பா­டு­கள் ஏது­மில்லை. அவ்­வா­றான பாது­காப்பு நடை­மு­றை­களை அவர்­கள் கடைப்­பி­டிப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை.

"அண்­மை­யில் மருத்­து­வ­மனை ஒன்­றில் தீ விபத்து நடந்­தது. அங்கு குண­ம­டைந்த கொரோனா தொற்று நோயாளி ஒரு­வர், மறு நாள் வீட்­டுக்­குச் சென்று தன் குடும்­பத்­தி­ன­ரு­டன் ஒன்­று­சேர ஆசை­யு­டன் காத்­தி­ருந்­தார். ஆனால், இந்­தத் தீ விபத்­தில் அவ­ரும் பலி­யாக நேர்ந்­தது.

"நம் கண்­முன்னே இது­போன்ற சோகச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­துள்­ளன.

"இதற்­குக் கார­ணம், மருத்­து­வ­ம­னை­கள் பாது­காப்பு நடை­மு­றை­க­ளைக் கடைப்­பி­டிக்­கா­ததே.

"தீயைத் தடுப்­ப­தற்­கான நடை­மு­றை­க­ளைப் பின்­பற்றி அதற்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்ய குஜ­ராத் மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு அம்­மா­நில அரசு 2022ஆம் ஆண்டு வரை கெடு விதித்­துள்­ளது. அது­வ­ரை­யி­லும் மக்­கள் தீ விபத்­து­க­ளால் பலி­யா­கிக் கொண்­டு­தான் இருக்­க­வேண்­டுமா என்று நீதி­ப­தி­கள் கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர்.

"நாட்­டில் உள்ள அனைத்து மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் தீ தடுப்பு விதி­மு­றை­க­ளு­ட­னான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ள­னவா, அவை ஒழுங்­கா­கப் பரா­ம­ரிக்­கப்­ப­டு­கின்­ற­னவா என்­பது குறித்து தணிக்கை மேற்­கொள்ள வேண்­டும். அதற்கென சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்," என்று நீதி­ப­தி­கள் அமர்வு தெரி­வித்­தது.

இந்த வழக்கை இரு வாரங்­க­ளுக்கு நீதி­ப­தி­கள் ஒத்­தி­வைத்­த­னர்.