பறவைக் காய்ச்சல்: சிறுவன் மரணம்

புது­டெல்லி: பற­வைக் காய்ச்­சல் கார­ண­மாக டெல்லி எய்ம்ஸ் மருத்­துவமனை­யில் 11 வயது சிறு­வன் உயி­ரி­ழந்­த­தாக தெரி­விக்­கப்­பட்டுள்­ளது. இந்­தி­யா­வில் இந்த ஆண்டு பறவைக் காய்ச்­சல் கார­ண­மாக ஏற்­பட்ட முதல் மர­ணம் இது என்று தெரி­கிறது.

கேரளா, ராஜஸ்­தான், மத்­தி­யப் பிர­தே­சம், ஹரி­யானா, இமாச்­ச­லப் பிர­தே­சத்­தில் இந்த ஆண்­டின் தொடக்­கத்­தில் பற­வைக் காய்ச்­சல் உறுதி செய்­யப்­பட்­டது. ஏவி­யன் இன்­ஃப்­ளூ­யன்சா (Avian Influenza) எனும் பறவைக் காய்ச்­சல் கார­ண­மாக மேற்­கண்ட மாநி­லங்­களில் பற­வை­கள், வாத்­து­கள், காகங்­கள் உயி­ரி­ழந்­தன.

உயி­ரி­ழந்த பற­வை­க­ளின் மாதிரி­கள் பரி­சோ­திக்­கப்­பட்டு நாடு முழு­வ­தும் பறவைக் காய்ச்சல் பர­வா­மல் தடுக்க நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­ட­தால் பறவைப் காய்ச்­சல் ஓர­ளவு கட்­டுக்­குள் வந்­தது.

இந்த நிலை­யில்­தான் டெல்லி எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னை­யில் 11 வயது சிறு­வன் பறவைக் காய்ச்­சலுக்கு உயி­ரி­ழந்த சம்­ப­வம் பற்றி தெரி­விக்­கப்­பட்­டது. அந்த சிறு வனு­டன் தொடர்­பில் இருந்த மருத்துவமனை ஊழி­யர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டு உள்­ள­தாக அதி­காரி ஒருவர் கூறி­னார்.

தென்­கி­ழக்கு ஆசிய நாடு­களுடன் ஒப்­பி­டும்­போது பறவைக் காய்ச்­சல் தொற்று ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் இந்­தி­யா­வில் குறை­வாக இருப்­ப­தாக மும்பை கால்­நடை மருத்­து­வக் கல்­லூரி டாக்­டர் ஏ.எஸ். ரனாடே ஜன­வரி மாதம் தெரி­வித்து இருந்­தார். 70 டிகிரி செல்­சி­யஸ் வெப்­ப­நி­லைக்கு மேல் சென்­றால் அந்தக் கிருமி உட­ன­டி­யாக இறந்­து­வி­டும்.

தென்­கி­ழக்கு ஆசிய நாடு­களைப் போலல்­லா­மல், இந்­தி­யா­வில் இறைச்சி மற்­றும் முட்டை இரண்­டும் 100 டிகிரி செல்­சி­ய­சுக்­கும் அதிக சூட்­டில் நன்கு சமைக்­கப்­பட்டு உண்­ணப்­ப­டு­வ­தால் கோழி மற்­றும் முட்­டை­களைச் சாப்­பி­டு­வ­தால் கிருமி பாதிப்பு ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் மிக­வும் குறைவு என்­றும் அவர் தெரி­வித்து இருந்­தார்.

உள்நாட்டு கோழி மூலம் பரவும் பறவைக் காய்ச்சல் மனிதர்களைத் தொற்றினால் இருமல், காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, சுவாசிப்பதில் சிரமம், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, தசை வலி மற்றும் உடல்நலக்குறைவு ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த ஆண்டின் முதல் பலி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!