ஆறு உள்நாட்டு நீர்மூழ்கிகள் தயாரிக்கப்படும்

புதுடெல்லி: இந்திய கடற்படைக்கு ரூ.40,000 கோடி செலவில் ஆறு புதிய உள்நாட்டு நீர்மூழ்கி கப்பல்களைத் தயாரிக்கும் ஒப்பந்தப்புள்ளியை பாதுகாப்புத்துறை அமைச்சு கோரி உள்ளது.

இந்திய கடற்படையைப் பலப்படுத்தி வரும் மத்திய அரசு, உள்நாட்டில் புதிய நீர்மூழ்கி கப்பல்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இதைத் தயாரிக்க பல்வேறு இந்திய நிறுவனங்கள் போட்டிப் போட்ட நிலையில், மசாகன் கப்பல் கட்டும் நிறுவனமும் எல் அண்ட் டி நிறுவனமும் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தக் கப்பல்களைக் கட்டுவதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தப் புள்ளியை அமைச்சு வௌியிட்டுள்ளது.

இதில் தேர்வாகும் நிறுவனம், மத்திய அரசு அரசு அங்கீ கரித்து உள்ள ஐந்து நிறுவனங்களில் ஏதாவது ஒன்றுடன் இணைந்து நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் என்று தெரிவிக்கப் பட்டு உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!