ஆளில்லா வானூர்தி மூலம் தாக்க சதி: முழு விழிப்பு நிலையில் போலிஸ் துறை

புது­டெல்லி: இந்­தியா ஆகஸ்டு 15ஆம் தேதி தனது சுதந்­திர தினத்­தைக் கொண்­டா­டு­கிறது.

அதனை முன்­னிட்டு அதற்­கான பணி­களில் அரசு ஈடு­பட்டு வரு­கிறது. பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை­யும் பலப்­ப­டுத்தி வரு­கிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்­மீ­ருக்­கான சிறப்பு அந்­தஸ்து வழங்­கும் சட்­டப் பிரிவு ரத்து செய்­யப்­பட்­டது.

அந்த நாளில் டெல்­லி­யில் பயங்­க­ர­வா­தி­கள் ஆளில்லா வானூர்தி வழி தாக்­கு­தல் நடத்த வாய்ப்­பி­ருப்­ப­தாக உள­வுத் துறைக்­குத் தக­வல் கிடைத்து உள்­ளது.

அதனை அடுத்து புது­டெல்லி உள்­ளிட்ட பல இடங்­க­ளி­லும் போலிஸ் துறை விழிப்பு நிலை­யில் வைக்­கப்­பட்டு உள்­ளது.

இந்­நி­லை­யில், நேற்று முதல் ஆகஸ்டு 15ஆம் தேதி சுதந்­திர தினக் கொண்­டாட்­டம் முடி­வ­டை­யும் வரை டெல்லி செங்­கோட்டைக்குள் நுழைய தடை விதிக்­கப்­ப­டு­கிறது என்று தொல்­லி­யல் துறை வெளி­யிட்டு உள்ள செய்தி தெரி­வித்­தது.

காஷ்­மீர் மாநி­லம் ஜம்மு விமான படைத்­த­ளத்­தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி இரண்டு ஆளில்லா வானூர்­தி­கள் பறந்து வந்து தாக்கு­தல் நடத்­தின. அவற்­றில் சிறிய வகை ஆர்டிஎக்ஸ் வெடி­குண்­டு­களை பொருத்தி இருந்­த­னர். அது கீழே விழுந்து வெடித்­தது. இரண்டு பேர் காயம் அடைந்­த­னர்.

ராணுவ மையத்­தில் ஆளில்லா வானூர்­தி­கள் மூலம் தாக்­கு­தல் நடத்­தி­யது அது­தான் முதல் தடவை ஆகும். பாகிஸ்­தானை சேர்ந்த பயங்­க­ர­வா­தி­கள் அந்த ஆளில்லா வானூர்­தி­களை இயக்கி தாக்­கு­தல் நடத்­தி­ய­தாக இந்­தி­யத் தரப்­பில் தெரி­விக்­கப்பட்டது.

இந்த தாக்­கு­த­லுக்குப் பிறகு பல தடவை காஷ்­மீர் பகு­தி­களில் மர்­ம­மான முறை­யில் ஆளில்லா வானூர்­தி­கள் பறந்­துள்­ளன.

இத­னால் இத்­த­கைய வானூர்தி ­க­ளைப் பயன்­ப­டுத்தி பயங்­க­ர­வாதி­கள் மேலும் தாக்­கு­தல் நடத்­தக்­கூ­டும் என்று கருதி முன் எச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்த நிலையில் டெல்லியில் வானூர்தி மூலம் தாக்குதல் நடத்து வதற்குத் திட்டம் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!