மீண்டும் போராட்டக் களமானது டெல்லி; விவசாயிகள் ஆவேசம்

மீண்டும் போராட்டக் களமானது டெல்லி; விவசாயிகள் ஆவேசம்

2 mins read
530f4a20-1664-440f-b91e-3d8787caf182
ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் ஒரு பகுதியினர். படம்: ஏஎஃப்பி -

நாடாளுமன்றம் அருகே திரளாகக் கூடினர்; வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்து

புது­டெல்லி: விவ­சா­யி­க­ளின் போராட்­டம் கார­ண­மாக டெல்­லி­யின் ஜந்­தர் மந்­தர் பகுதி மீண்­டும் போராட்­டக் கள­மாக மாறி­யது.

மத்­திய அரசு கொண்டு வந்­துள்ள மூன்று புதிய வேளாண் சட்­டங்­க­ளுக்கு விவ­சா­யி­கள் மத்­தி­யில் கடும் எதிர்ப்பு நிலவி வரு­கிறது.

இத­னால் கடந்த பல மாதங்­க­ளாக டெல்­லி­யில் குவிந்­துள்ள நூற்­றுக்­க­ணக்­கான விவ­சா­யி­கள் சாலை­யோ­ரம் கூடா­ரங்­கள் அமைத்து தங்கி, தொடர் போராட்­டங்­களில் ஈடு­பட்டு வந்தனர்.

அர­சுக்­கும் விவ­சாய சங்­கங்­க­ளுக்­கும் இடையே நடை­பெற்ற பல­சுற்­றுப் பேச்­சு­வார்த்­தை­கள் தோல்வி அடைந்­தன.

கொரோனா தொற்­றுப் பர­வல் கடந்த ஓரிரு மாதங்­க­ளுக்கு முன்பு கடு­மை­யாக இருந்­த­தால், விவ­சா­யி­கள் தரப்பு அமைதி காத்து வந்­தது. இந்­நி­லை­யில், நாடா­ளு­மன்றக் குளிர்­கா­லக் கூட்­டத்­தொ­டர் தொடங்­கி­யதை அடுத்து, விவ­சா­யி­கள் மீண்­டும் போராட்­டக் களத்­துக்கு வந்­துள்­ள­னர்.

தற்­போது டெல்லி சிங்­குர் எல்­லை­யில் இருந்து ஜந்­தர் மந்­த­ருக்கு போராட்­டக் களத்தை மாற்­றி­யுள்ள விவ­சா­யி­கள் நேற்று காலை அங்கு போராட்­டத்தை தொடங்­கி­னர்.

முன்­ன­தாக நாடா­ளு­மன்­றம் முன்பு ஆர்ப்­பாட்­டம் நடத்த அவர்­கள் அனு­மதி கோரி­ய­போது காவல்­துறை அனு­மதி அளிக்க மறுத்­தது. நேற்று காலை ஏரா­ள­மான விவ­சா­யி­கள் ஜந்­தர் மந்­தர் பகு­திக்கு பேருந்­து­களில் வந்து சேர்ந்­த­னர். பின்­னர் வேளாண் சட்­டங்­க­ளுக்கு எதி­ராக கண்­டன முழக்­கங்­கள் எழுப்­பப்­பட்­டன.

ஜந்­தர் மந்­தர் பகு­தி­யா­னது நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் இருந்து சில நூறு மீட்­டர் தொலை­வில்­தான் அமைந்­துள்­ளது. நாடா­ளு­மன்ற அவை நட­வ­டிக்­கை­க­ளைப் பின்­பற்றி விவ­சா­யி­க­ளின் போராட்­ட­மும் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.

சபா­நா­ய­கர், துணை சபா­நாய­கர், தேநீர் இடை­வேளை என நாடா­ளு­மன்ற அமர்­வின் விதி­களே ஜந்­தர் மந்­தர் போராட்­டத்­தில் பின்­பற்­றப்­படும் என்று விவ­சா­யி­கள் தெரி­வித்­துள்­ள­னர். மழைக்­கால கூட்­டத்­தொ­டர் முடி­யும் வரை தங்­களின் போராட்­டம் நீடிக்­கும் என்­றும் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­த­னர்.

இதற்­கி­டையே, காங்­கி­ரஸ் கட்சி முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி தலை­மை­யில் அக்­கட்சி எம்­பிக்­களும் வேளாண் சட்­டங்­க­ளுக்கு எதி­ராக நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் உள்ள காந்தி சிலை முன்பு நேற்று போராட்­டம் நடத்­தி­னர்.