எடியூரப்பா: தலைமைக்கு எதிராகப் பேசாதீர்

எடியூரப்பா: தலைமைக்கு எதிராகப் பேசாதீர்

1 mins read
0da2ae22-5584-4201-a00f-22c7de8dc8fc
-

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் பாஜக உட்­கட்­சிப் பூசல் உச்­சத்தை எட்­டி­யுள்­ள­தாக அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறி­யுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், வரும் 26ஆம் தேதி பெங்­க­ளூ­ரு­வில் நடை­பெற உள்ள பாஜக எம்­எல்­ஏக்­கள் கூட்­டத்­தின்­போது கட்­சித் தலை­மைக்கு எதி­ராக யாரும் பேசக்­கூ­டாது என தமது ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு முதல்­வர் எடி­யூ­ரப்பா வலி­யு­றுத்தி உள்­ளார்.

முதல்­வர் பத­வி­யில் இருந்து எடி­யூ­ரப்­பாவை நீக்க வேண்­டும் என கர்­நா­டக பாஜ­க­வில் ஒரு தரப்­பி­னர் கூறி வரு­கின்­ற­னர். அவ­ரது அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெற்­றுள்ள சில­ரும் கூட அவர் மீது அதி­ருப்­தி­யில் இருப்­ப­தாக அண்­மை­யில் செய்தி வெளி­யா­னது.

இந்­நி­லை­யில் டெல்லி சென்ற முதல்­வர் எடி­யூ­ரப்பா, அங்கு பிர­த­மர் மோடி உள்­ளிட்ட தலை­வர்­களைச் சந்­தித்­துப் பேசி­னார். அதன் பின்­னர் தாம் பதவி விலக வேண்­டிய அவ­சி­யமே எழ­வில்லை என்றார்.

இந்­நி­லை­யில், பாஜக எம்­எல்­ஏக்­கள் கூட்­டத்­தில் அவர் பதவி வில­கு­வது குறித்து எதிர்த்­த­ரப்­பி­னர் வலி­யு­றுத்த இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அதே­ச­ம­யம் பெரும்­பா­லான எம்­எல்­ஏக்­க­ளின் ஆத­ரவு தமக்கு இருப்­ப­தாக கட்­சித் தலை­மைக்கு காட்ட முதல்­வர் எடி­யூ­ரப்பா முடிவு செய்­தி­ருப்­ப­தா­கத் தெரி­கிறது.

இந்­நி­லை­யில், தம்மை ஆத­ரிப்­ப­தா­கக் கூறிக்­கொண்டு யாரும் பாஜக தலை­மைக்கு எதி­ராக கருத்து தெரி­விக்­கக்­கூ­டாது என டுவிட்­ட­ரில் அவர் பதி­விட்­டுள்­ளார்.

எனி­னும் இவ்­வாறு பதி­விட்­ட­தன் மூலம் பாஜக தலை­மைக்­கும் எடி­யூ­ரப்­பா­வுக்­கும் இடையே கருத்து வேறு­பாடு நில­வு­வது அப்­பட்­ட­மா­கத் தெரி­வ­தாக ஒரு த­ரப்­பி­னர் கூறுகின்றனர்.