பாஜக: மாநில அரசுகள் மாற்றிப் பேசுகின்றன

பாஜக: மாநில அரசுகள் மாற்றிப் பேசுகின்றன

1 mins read
21e07ace-340c-4af9-9746-99a8ab581d1b
-

புது­டெல்லி: உயிர்­வாயுப் பற்­றாக்­குறை­யால் ஏற்­பட்ட உயி­ரி­ழப்­பு­கள் தொடர்­பாக சில மாநில அர­சு­கள் முன்­னுக்­குப்பின் முர­ணா­கப் பேசு­வதாக பாஜக சாடி­யுள்­ளது.

உயி­ரி­ழப்பு எது­வும் ஏற்­ப­ட­வில்லை என்று கூறி­வந்த எதிர்க்­கட்­சி­கள் ஆளும் மாநி­லங்­கள் தற்­போது இவ்­வி­வ­கா­ரத்தை வைத்து அர­சி­யல் செய்­வ­தாக பாஜக செய்­தித் தொடர்­பா­ளர் சாம்­பிட் பத்ரா குற்­றம் சாட்­டி­யுள்­ளார்.

கொரோனா இரண்­டா­வது அலை­யின் போது நாட்­டில் ஒரு­வர் கூட உயிர்­வாயுப் பற்­றாக்­கு­றை­யால் உயி­ரி­ழக்­க­வில்லை என நாடா­ளு­மன்­றத்­தில் மத்­திய சுகா­தா­ரத்­துறை இணை அமைச்­சர் பாரதி பிர­வீண் பவார் குறிப்­பிட்­டது சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது. இந்­தி­யா­வில் உயிர்­வாயு பற்­றாக்­குறை நில­வி­ய­தாக அனைத்­து­லக ஊட­கங்­களும் செய்­தி­யாக வெளி­யிட்­டதை எதிர்க்­கட்­சி­கள் சுட்­டிக்­காட்டி உள்­ளன.

இந்­நி­லை­யில், காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி, டெல்லி முதல்­வ­ர் அர­விந்த் கெஜ்­ரி­வால் உள்­ளிட்­டோர் இந்த விவ­கா­ரத்தை கையில் எடுத்­துக் கொண்டு அர­சி­யல் செய்­வ­தா­கச் சாடு­கிறது பாஜக.

"உயிர்­வாயுப் பற்­றாக்­குறை கார­ண­மாக உயி­ரி­ழப்பு ஏற்­ப­ட­வில்லை என்று சில மாநி­லங்­களும் யூனியன் பிரதேசங்களும் நீதி­மன்­றத்­தி­லேயே தக­வல் தெரி­வித்­தன. ஆனால், இப்போது அந்­தத் தக­வலை மறைத்து அதே அர­சு­கள் மாற்­றிப் பேசு­கின்­றன. இக்­கு­றிப்­பிட்ட அர­சு­கள் அளித்த தக­வலை வைத்­துத்­தான் மத்­திய அமைச்­சர் நாடாளுமன்­றத்­தில் பேசி­னார்," என்­றார் சம்பித் பத்ரா.

இதற்­கி­டையே மத்­திய அர­சின் தவ­றான முடிவு கார­ண­மாக நாட்­டில் 5 மில்­லி­யன் பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக ராகுல் காந்தி கூறி­யுள்­ளார்.இதுகுறித்து வெளி­யான ஓர் ஆய்வு அறிக்­கையைச் சுட்­டிக்­காட்டி உள்ள அவர், அதன் விவ­ரங்­களைத் தமது டுவிட்­டர் பக்­கத்­தில் பகிர்ந்­துள்­ளார்.